நடுக்காட்டில் நடந்த பயங்கரம்! சாக்குமூட்டையில் கிடைத்த அழுகிய சடலம்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலபாஸ்கர். இவரின் மனைவி ஆரோக்கியமேரி தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி பணிக்கு சென்றவர் வெகு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் அவரது கணவர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் மாயமாகிய ஆரோக்கியமேரியை பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் ஆரோக்கியமேரியுடன் வேலை செய்யும் ரமேஷ் என்பவர் சாலை மறியலில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் ரமேஷை கைது செய்து விசாரித்ததில் ஆரோக்கியமேரியை கொலை செய்து பூத்துறை பகுதியில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளி ரமேஷிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.