எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவில் இருந்து நீக்கனும்! சசிகலா, ஓ.பி.எஸ் தான் வரனும்... ஒலித்த பிரபலத்தின் குரல்
அதிமுகவுக்கு சசிகலா அல்லது ஓபிஎஸ் தலைமையேற்க வேண்டும் என புகழேந்தி கூறியுள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தன்னை கூறிவரும் நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஓபிஎஸ் கருத்தை தொடர்ந்து அதிமுகவில் மீண்டும் கருத்து மோதல் வெடித்துள்ளது.
ஒருதரப்பினர் ஒபிஎஸ் கருத்துக்கு ஆதரவும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் மாநில செயலாளர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்ற நுழைவுவாயிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், அதிமுக சரிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதால் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சரியான முடிவை எடுக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கி சசிகலா அல்லது ஓபிஎஸ் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக பொறுப்பேற்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிய போது நல்லவராக இருந்த சசிகலா இப்போது கெட்டவராக தெரிகிறார் எனக்கூறிய புகழேந்தி, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கு எதிராக முனுசாமி போன்றவர்கள கருத்து கூறுவது ஏற்புடையதல்ல என கூறியுள்ளார்.