ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பூஜித் ஜயசுந்தருக்கு மரண தண்டனை
கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு திருநாள் அன்று கொழும்பு உட்பட 3 இடங்களில் 3 தேவாலயங்கள், 3 ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது.
இதில், 39 வெளிநாட்டவர்கள், 3 காவல்துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர் உயிரிழந்தனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதில், போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், தாக்குதலை தடுக்க நடவடிக்கை தவறியதாக முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றத்தின் விசாரணை அமர்வு இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |