நல்ல தூக்கம் வேண்டுமா? அப்போ இதை கண்டிப்பா உணவில் சேர்த்து கொள்ளுங்கள்
பூசணிக்காய் விதைகளில் கொட்டி கிடக்கும் மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பூசணிக்காய் விதை
பூசணிக்காய் விதைகளை பெரும்பாலும் நம் வீட்டில் பயன்படுத்துவது இல்லை.
ஆனால் இந்த பூசணிக்காய் விதைகளில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களும், மருத்துவ குணங்களும் கொட்டி கிடக்கின்றன.
மருத்துவ பயன்கள்
பூசணிக்காய் விதையில் அதிகப்படியான நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகியவை நிறைவாக உள்ளது.
இதனால் பூசணிக்காய் விதைகளை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
பூசணிக்காய் விதைகளில் மக்னீசியம் இருப்பதால் இவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
அத்துடன் குறிப்பாக பூசணிக்காய் விதைகளில் ஒமேகா 3 இருப்பதால் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முக்கிய பங்காற்றுகிறது.
இவை செரோட்டின் ஹார்மோன் சுரப்பதற்கு உதவுவதால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
ஆண்களின் ஹார்மோன் செயல்பாடு, பெண்களின் மாதவிடாய் வலி குறைப்பு ஆகியவற்றுக்கு பூசணி விதைகள் பெரிதும் உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
pumpkin seeds, Good Sleep, omega 3,