10 நாள் ஆனாலும் கெடாமல் இருக்கும் பூண்டு தொக்கு! எப்படி தயாரிக்கலாம்?
வெள்ளைப் பூண்டு பலவியாதிகளைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. வெள்ளைப் பூண்டை அடிக்கடிச் சாப்பிட்டு வந்தால் உடலில் வாய்வு சேராது. நன்றாகக் வேறு எந்த வகையான வியாதியும் வராது.
பல வகை மருத்துவகுணங்களை உள்ளடக்கிய பூண்டை வைத்து தொக்கு செய்து சாப்பிட்டு வரலாம். இது 10 நாட்கள் வரையிலும் கெடாமல் இருக்கும். பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரை இருக்கும். தற்போது அவற்றை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 1 1/2 குழிக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு - 1 கப்
இஞ்சி - 1/2 துண்டு
புளி - சிறிதளவு
செய்முறை
கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய வையுங்கள்.
பின் மிதமான தீ வைத்து காய்ந்த மிளகாய் போட்டு வதக்க வேண்டும். கருகாமல் வதக்கி எடுக்க வேண்டும். அதன் பின் மிளகாய்களை எடுத்துவிட்டு பூண்டு சேர்த்து வதக்குங்கள்.
அதோடு இஞ்சியும் சேர்த்துக்கொள்ளுங்கள். பூண்டு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
இறக்குவதற்கு முன் புளியை துண்டு துண்டாக பிச்சி போட்டு வதக்குங்கள்.
அனைத்தையும் நன்கு வதக்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வையுங்கள். இப்போது மிக்ஸியில் காய்ந்த மிளகாயை முதலில் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் பூண்டு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் பூண்டு தொக்கு தயார்.
இதை ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
தேவைப்படும்போது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இந்த தொக்கை போதுமான அளவு சேர்த்து பிரட்டி சாப்பிடலாம்.