பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா வரும் பாகிஸ்தான் ஹாக்கி அணி
punjab cm confirms pakistan hockey team to play in india: இந்தியாவில் நடைபெற உள்ள ஆடவர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தான் கலந்து கொள்ளும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியா வரும் பாகிஸ்தான் ஹாக்கி அணி
2026 ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி, அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை இந்தியாவின் பஞ்சாபில் நடைபெற உள்ளது.

இதில் நடப்பு சாம்பியானான இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.
லீக் சுற்றுப் போட்டிகள் ஜலந்தரிலும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மொஹாலி மைதானத்திலும் நடைபெற உள்ளன.

பங்கேற்கும் அணிகளில் ஏதேனும் ஒன்று விலகினால், மாற்று அணிகளாக ஓமன் மற்றும் வங்கதேசம் பங்கேற்க உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு போட்டிகள் விளையாட கட்டுப்பாடு உள்ள நிலையில், பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்க எந்தப் பிரச்சினையும் இல்லை என இந்தியாவின் கொள்கையை சுட்டிக்காட்டிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், பாகிஸ்தான் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒலிம்பிக் சாசனத்திற்கு இணங்க, பலதரப்புப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றோடு ஒன்று போட்டியிடலாம் என்றும், இந்தியாவில் நடைபெறும் அத்தகைய போட்டிகளில் எல்லை தாண்டிய விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட மாட்டாது எனவும் விளையாட்டு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்தது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடமிருந்து கோப்பையை பெற மறுத்தது ஆகியவற்றை காரணம் காட்டி, தமிழ்நாட்டில் நடைபெறவிருந்த 2025 இளையோர் உலகக் கிண்ண போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகியது.
நேற்று 2026 மகளிர் ஆசிய கிண்ண T20 தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதும், பிசிசிஐயின் உத்தரவிற்கு ஏற்ப ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து இந்திய மகளிர் அணி தங்களது வெற்றிக் கிண்ணத்தை வாங்க மறுத்தது.