இந்தியாவில் முதல் iPhone 18 Pro Max மொபைலை வாங்கிய பஞ்சாப் இளைஞர்
Punjab man buys first iPhone 18 Pro Max India: பஞ்சாபை சேர்ந்த இளைஞர் முதல் iPhone 18 Pro Max-ஐ வாங்கியுள்ளார்.
இந்தியாவில் வெளியானது iPhone 18 series
ஆப்பிள் நிறுவனம் இன்று (செப்டம்பர் 18) அதன் புதிய iPhone 18, iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max மாடல்களை இந்தியாவில் வெளியிட்டது.
டெல்லி-NCR பகுதிகளில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் அதிகாலை முதலே Apple iphone ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

முதல் iPhone 18 Pro Max
நோய்டாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில், காலை 6 மணிக்கே வரிசையில் நின்று காத்திருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், முதல் iPhone 18 Pro Max வாங்கிய வாடிக்கையாளராகத் திகழ்ந்தார்.
வெள்ளை சட்டையும் பச்சை டர்பானும் அணிந்திருந்த அவர், “நான் முதலாவதாக iPhone வாங்கியவன். இதற்காகவே பஞ்சாப் மாநிலத்திலிருந்து வந்தேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
#WATCH | Noida, UP: A buyer says, "I bought two iPhone 18 Pro Max. I came from Punjab and have been standing in the queue since 6 AM. Mine was the very first booking; I am the first one who has got the phone..." https://t.co/ZfhLUMhw5i pic.twitter.com/rVR3U5CNZI
— ANI (@ANI) September 18, 2026
அவர் ஒரே நேரத்தில் இரண்டு iPhone 18 Pro Max மாடல்களை வாங்கினார். மற்ற வாடிக்கையாளர்கள் புதிய மாடல்களை சோதித்து பார்த்து, பின்னர் வாங்கும் ஆர்வத்தில் இருந்தனர்.
ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள், வாடிக்கையாளர்களை வரவேற்று கைத்தட்டலுடன் உற்சாகமாக வரவேற்றனர். மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களிலும் இதேபோன்ற ஆர்வம் காணப்பட்டது.
விலை
புதிய iPhone 18 Pro விலை ரூ.1,64,900 (256GB) முதல் தொடங்குகிறது. 512GB ரூ.1,89,900, 1TB ரூ.2,39,900 மற்றும் 2TB ரூ.3,14,900 ஆகும். iPhone 18 Pro Max விலை ரூ.1,79,900 (256GB) முதல் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.3,29,900 வரை உள்ளது.
இந்த நிகழ்வு, இந்தியாவில் iPhone ரசிகர்களின் உற்சாகத்தையும், புதிய மாடல்களின் பிரபலத்தையும் வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |