50 ஆண்டுகளுக்கு பிறகு லொட்டரியில் கோடிகளை அள்ளிய முதியவர்! சந்தோஷத்தின் உச்சம்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முதியவருக்கு 50 ஆண்டுகள் கழித்து லொட்டரியில் பெருந்தொகை கிடைத்துள்ளது.
லொட்டரியில் பரிசு
இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ப்ரீதம் லால் ஜக்கி (67). இவரது மனைவி அனிதா. இவர், 30 ஆண்டுகளாக ஜலந்தரில் ஸ்கிராப் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளாக லொட்டரி வாங்குவதை ப்ரீதம் லால் ஜக்கி பழக்கமாக வைத்துள்ளார்.
இவரது வீட்டிற்கு ரக்ஷா பந்தன் அன்று இவரது நண்பர் சேவக் என்பவர் வந்திருந்தார். அவரிடம் ரூ.500 -யை கொடுத்து தனது மனைவி பெயரில் லொட்டரி சீட்டை வாங்கிவருமாறு ப்ரீதம் லால் ஜக்கி கூறியுள்ளார்.
பின்னர், லொட்டரி சீட்டை வாங்கியவுடன் வழக்கம் போல தனது வேலைகளை பார்த்து வந்துள்ளார். இதன் பின்னர், கடந்த 25 -ம் திகதி லொட்டரி தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள்ள செய்தித்தாளை பார்த்துள்ளார். அப்போது தான் அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
அப்போது, தனது மனைவி பெயரில் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு 2.5 கோடி ரூபாய் பரிசு விழுந்திருந்தது. இதனை பார்த்ததும் தன்னுடைய லொட்டரி எண்ணிற்கு தான் விழுந்திருக்கிறதா என்று குழப்பமும் அடைந்தார்.
பின்னார், சிறிது நேரத்தில் லொட்டரி விற்பனை முகவரிடமிருந்து அழைப்பு வந்ததும் தான் அந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.
இதனையறிந்த மீடியாக்கள் அவரை பேட்டி எடுப்பதற்காக உடனே வந்தனர். அப்போது அவர்களிடம் பேசிய லால் ஜக்கி, "நான் கடந்த 50 ஆண்டுகளாக லொட்டரி சீட்டு வாங்கி வருகிறேன்.
நான் அப்போது வாங்கும் போது ஒரு லொட்டரியின் விலை ரூ.1. ஆனால் இப்போது அதன் விலை ரூ.500. எந்த அளவுக்கு லொட்டரி விற்பனை முன்னேறியுள்ளது என்று பாருங்கள்.
கடந்த 30 ஆண்டுகளாக நான் ஸ்கிராப் விற்பனை செய்கிறேன். என்னால் எதையும் சொந்தமாக்க முடியவில்லை.
இப்போது இந்த பணத்தை வைத்து ஒரு வீட்டையும், கடையையும் கட்டவுள்ளேன். அதில், 25 சதவீதத்தை சமூகப் பணிகளுக்குச் செலவிடுவேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |