ட்ரக் சாரதியை கோடீஸ்வரராக்கிய லொட்டரிச்சீட்டு
Truck driver wins Rs 12 crore Punjab Diwali Bumper lottery: ட்ரக் சாரதி ஒருவர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் பல்ஜிந்தர் சிங். 15 ஆண்டுகளாக லொட்டரிச்சீட்டு வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சிங்.
ட்ரக் சாரதியை கோடீஸ்வரராக்கிய லொட்டரி

ட்ரக் சாரதியான சிங், சமீபத்தில் 500 ரூபாய்க்கு லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த லொட்டரிச்சீட்டு அவரை கோடீஸ்வரராக்கியுள்ளது. ஆம், அந்த லொட்டரிச்சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
சிங்குக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில், பரிசுத் தொகையில் பெரும் பகுதியை தன் பிள்ளைகளுடைய படிப்புக்காக செலவிட இருப்பதாக தெரிவித்துள்ளார் சிங்.