திருமண விழாவில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் பலி: உறவினர்கள் கதறி அழும் சோகக்காட்சி
பஞ்சாபில் திருமண விழாவில் சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் கதறி அழும் சோகக்காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில், பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் பகுதியில் திருமண நிகழ்ச்சியின் போது சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.
விக்ரம்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் ஒரு சிறுமியும் அடங்குவர்.
இதையும் படிங்க: இரண்டாக உடைந்து கடலில் மூழ்கிய கப்பல்! மாயமான 27 பணியாளர்கள்.. பதறவைக்கும் காட்சி
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலிண்டரின் ரெகுலேட்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நால்வரின் உடலை வைத்து உறவினர்கள் கதறி அழும் காட்சி சோகத்தை அளிக்கிறது.
இதையும் படிங்க: பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி காவலர் பதவி நீக்கம்!