பிரித்தானியாவிலிருந்து ஊர் சுற்றிப்பார்க்க புறப்பட்ட இந்திய இளம்பெண்: அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட துயரம்
பிரித்தானியாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இளம்பெண்ணொருவரின் ஊர் சுற்றிப்பார்க்கும் ஆசையால், இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவுக்குக் கல்வி கற்கச் சென்ற பெண்
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த Muskan (21) என்னும் இளம்பெண், லண்டனிலுள்ள CU கல்லூரியில் வணிக மேலாண்மை பட்டப்படிப்பு படிக்கச் சென்றுள்ளார்.
பிரித்தானியாவுக்குக் கல்வி கற்கச் சென்ற Muskan, தற்போது அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவராக இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன?
பிரித்தானியாவுக்குக் கல்வி கற்கச் சென்ற பெண் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டது எப்படி என்றால், அது ஒரு துயரக்கதை என கண்ணீருடன் தெரிவிக்கிறார் Muskan.
தானும் தனது நண்பர்களும் மெக்சிகோ அமெரிக்க எல்லையிலுள்ள Tijuana எனுமிடத்துக்குச் சுற்றுலா சென்றதாக தெரிவிக்கிறார் Muskan.
தங்களை தடுத்து நிறுத்திய பொலிசார், விரைவில் உங்களை அமெரிக்க அதிகாரிகள் இங்கிருந்து அழைத்துச் செல்வார்கள் என கூறியதாக தெரிவிக்கிறார் Muskan.
அமெரிக்க தடுப்புக் காவல் மையம் ஒன்றில் 10 நாட்கள் அடைத்துவைக்கப்பட்டபின், தாங்கள் விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டதாக தெரிவிக்கிறார் Muskan.
அவர்கள் ஏறிய விமானம் இந்தியாவின் அமிர்தசரஸில் வந்து இறங்கியபோதுதான், தாங்கள் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டதே தனக்குத் தெரியும் என்கிறார் அவர்.
ஏராளம் பணத்தை கடன் வாங்கி மகளை பிரித்தானியாவுக்கு கல்வி கற்க வைத்த Muskanஇன் பெற்றோர், தங்கள் மகள் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
கல்வி கற்கச் சென்ற இடத்தில் கல்வி கற்பதை விட்டு விட்டு சுற்றுலா செல்ல வந்த ஆசையால், பணம் நஷ்டப்பட்டு, எதிர்காலம் தெரியாமல் திகைத்துப்போய் அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கிறார் Muskan.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |