கனடா பொதுத்தேர்தல்... பஞ்சாபி வம்சாவளி 22 பேர்கள் எம்.பி.க்களாகத் தெரிவு
நடந்து முடிந்த கனேடிய பொதுத்தேர்தலில் பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்த 22 வேட்பாளர்கள் எம்.பி.க்களாகத் தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.
பிராம்ப்டன் நகரத்தில்
2025 கனேடிய பொதுத்தேர்தல் பஞ்சாபி சமூகத்திற்கு ஒரு வரலாற்று மைல்கல்லாக மாறியுள்ளது. மட்டுமின்றி, கனடா அரசியலில் பஞ்சாபி புலம்பெயர்ந்தோரின் வளர்ந்து வரும் செல்வாக்கை இது காட்டுகிறது.
பஞ்சாபியர்களின் வலுவான இருப்புக்கு பெயர் பெற்ற பிராம்ப்டன் நகரத்தில், தேர்தல் முடிவுகள் கவனத்தை ஈர்த்துள்ளது. பிராம்ப்டனில் உள்ள ஐந்து தொகுதிகளில் லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட பஞ்சாபி பெயர்களைக் கொண்ட வேட்பாளர்கள் தங்கள் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
லிபரல் கட்சியைச் சேர்ந்த ரூபி சஹோட்டா, பிராம்ப்டன் வடக்கில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த அமன்தீப் ஜட்ஜை தோற்கடித்தார். அதே நேரத்தில், லிபரல் கட்சியைச் சேர்ந்த மனிந்தர் சித்து, பிராம்ப்டன் கிழக்கில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பாப் டோசன்ஜை தோற்கடித்தார்.
பிராம்ப்டன் தெற்கில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த சுக்தீப் காங், லிபரல் கட்சி வேட்பாளரான சோனியா சித்துவை தோற்கடித்தார். முன்னாள் அமைச்சரான அனிதா ஆனந்த், ஓக்வில் கிழக்கில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
மூன்றாமிடத்திற்கு
வாட்டர்லூ தொகுதியில் பார்டிஷ் சாகர் வெற்றி பெற்றுள்ளார். லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட அஞ்சு தில்லான், சுக் தலிவால், ரன்தீப் சாராய் மற்றும் பரம் பெயின்ஸ் ஆகியோர் தங்கள் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஜஸ்ராஜ் ஹாலன், தல்விந்தர் கில், அமன்பிரீத் கில், அர்பன் கன்னா, டிம் உப்பல், பார்ம் கில், சுக்மான் கில், ஜக்ஷரன் சிங் மஹால் மற்றும் ஹர்ப் கில் ஆகியோரும் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
ஆனால் பர்னபி சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டதுடன் தமது தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |