வெனிசுலாவில் நிலநடுக்க இடிபாடுகளில் 5 நாட்கள் கழித்து குட்டி நாய் மீட்பு., நெகிழவைக்கும் காட்சி
வெனிசுலாவில் நிலநடுக்க இடிபாடுகளில் 5 நாட்கள் கழித்து குட்டி நாயொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
ஜிசெல் என்ற குட்டி நாய்
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் (7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவு) பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்த இடிபாடுகளில் சிக்கியிருந்த ஜிசெல் (Giselle) என்ற குட்டி நாய், ஐந்து நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டது.

காரபல்லெடா, லா குவாய்ரா மாநிலத்தில் நடந்த இந்த மீட்பு நடவடிக்கையில், எல் சல்வடார் தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் பங்கேற்றனர்.
இடிபாடுகளுக்குள் இருந்து மெலிந்த குரல் கேட்டதையடுத்து, அவர்கள் கைகளால் கான்கிரீட் துண்டுகளை எடுத்து, சுமார் ஐந்து மணி நேரம் போராடி நாயை உயிருடன் வெளியே கொண்டுவந்தனர்.
முதலில், குறுகிய இடைவெளியில் தண்ணீர் பாட்டிலை கீழே இறக்கி, தாகத்தால் வாடியிருந்த நாயை சற்று நிம்மதியடையச் செய்தனர். பின்னர், பாதுகாப்பாக வெளியே எடுத்து, பணியாளரின் கைகளில் வைத்தபோது, குட்டி நாய் அவரை நக்கி, வால் ஆட்டி அன்பை வெளிப்படுத்தியது.
Luego de 5 horas logramos rescatar a esta perrita que responde al nombre de Giselle, en Residencial El Palmar, Caraballeda.
— Nayib Bukele (@nayibbukele) June 30, 2026
Si alguien es su dueño, puede acercarse a nuestros equipos en la zona y demostrar con fotos o videos que es suya. pic.twitter.com/8ddID8Wtln
நெகிழவைக்கும் காட்சி
இந்த உணர்ச்சிகரமான காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, உலகம் முழுவதும் மக்களின் இதயத்தை கவர்ந்துள்ளது.
சல்வடார் ஜனாதிபதி நயிப் புக்கேலே, “ஜிசெல் என அழைக்கப்படும் இந்த நாயின் உரிமையாளர்கள் புகைப்படம் அல்லது வீடியோ மூலம் நிரூபித்தால், அதை பெற்றுக்கொள்ளலாம்” என அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |