புடினின் உருவப்படத்துடன் ஆபாச செயல்கள்: ஐந்து பெண்களுக்கு சிறை தண்டனை..பிரபலத்திற்கு 13 ஆண்டுகள்
பெண்ணிய போராட்டக் குழுவான புஸ்ஸி ரியட்டின் உறுப்பினர்களுக்கு மாஸ்கோ நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
புடினின் உருவப்படத்துடன்
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய இராணுவத்தைப் பற்றி இசை வீடியோவில் தவறான தகவல்களை பரப்பியதாக, புஸ்ஸி ரியாட் (Pussy Riot) என்ற பெண்ணிய போராட்டக் குழுவின் உறுப்பினர்கள் ஐந்து பேர் குற்றம்சாட்டப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து 2024 ஏப்ரல் மாதத்தில் ஜேர்மனியின் முனிச் நகரில் நடந்த நிகழ்ச்சியின்போது, இதே குழு ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உருவப்படத்துடன் ஆபாசமான செயல்களை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டனர்.
இந்த நிலையில் மாஸ்கோவின் பாஸ்மனி மாவட்ட நீதிமன்றம் மரியா அலியோகினா, டாஸோ பிளேட்னர், ஓல்கா போரிசோவா, டயானா பர்கோட் மற்றும் அலினா பெட்ரோவா ஆகிய 5 பெண்களையும் குற்றவாளிகள் என கண்டறிந்துள்ளது.
13 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அவர்களில் மிகவும் பிரபலமான உறுப்பினர் அலியோகினாவுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
பிளெட்னருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்ற மூவருக்கு தலா 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்ததாக Mediazona செய்தி வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், தண்டனை விதிக்கப்பட்ட பெண்கள் தங்களது வழக்கறிஞர்கள் மூலம், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், சிறைத்தண்டனை அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதாக கருதுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |