விளாடிமிர் புடின் மீது படுகொலை முயற்சி: அம்பலமான ட்ரோன் தாக்குதல் பின்னணி
ரஷ்யாவின் சோச்சியில் அமைந்துள்ள ரிசார்ட்டின் மீது இரவு முழுவதும் நடந்த ட்ரோன் தாக்குதல்கள் விளாடிமிர் புடினை படுகொலை செய்யும் உக்ரைனின் முயற்சியாக இருக்கலாம் என்றே ரஷ்ய இராணுவ நிபுணர்கள் சந்தேகம் எழிப்பியுள்ளனர்.
விடிய விடிய ட்ரோன் தாக்குதல்
சோச்சி நகரில் நடந்த அரசியல் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அத்துடன், உக்ரைன் மீதான படையெடுப்பையும் அவர் காலத்தின் கட்டாயம் என விளக்கமளித்தார்.
இந்த நிலையில் இரவு முழுவதும் நடந்த ட்ரோன் தாக்குதல் காரணமாக சோச்சி விமான நிலையம் சுமார் 5 மணி நேரம் மூடப்பட்டதுடன், வான் தாக்குதல் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த ரிசார்ட் மீதான தாக்குதலை அடுத்து ட்ரோன் தடுப்பு பாதுகாப்பு அமைப்புகள் களமிறக்கப்பட்டது. நள்ளிரவு கடந்து விடிய விடிய ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது.
உக்ரைனின் இந்த நடவடிக்கை விளாடிமிர் புடினை குறிவைத்துள்ளதாகவே இராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மட்டுமின்றி, உக்ரைன் மீதான போரின் போக்கை இந்த தாக்குதல் மாற்றக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் புடின் மீதான படுகொலை முயற்சியாக இருக்கலாம் என ரஷ்யா உத்தியோகப்பூர்வமாக தீர்மானித்தால், இராணுவ பழிவாங்கல் மிகப்பெரியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அனைத்து நேட்டோ நாடுகளும்
இதனிடையே, மாஸ்கோவிற்கான சோச்சி விமானங்கள் அனைத்தும் ரஷ்யாவின் செச்சென் குடியரசின் தலைநகரான க்ரோஸ்னி நகரத்திற்கு திருப்பி விடப்பட்டன. க்ரோஸ்னியில் அமைந்துள்ள Gelendzhik விமான நிலையமானது விளாடிமிர் புடினின் 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொகுசு மாளிகைக்கு மிக அருகே அமைந்துள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ போர் தொடங்கியுள்ளதாக விமர்சித்த புடின், டென்மார்க், நார்வே, ஜேர்மனி மற்றும் பிற நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் ரஷ்ய ட்ரோன்கள் நாசத்தை விளைவிப்பதாக சந்தேகிக்கப்படுவதை கேலி செய்தார்.
மேலும், நேட்டோ பிராந்தியங்கள் மீது படையெடுக்கும் திட்டம் ரஷ்யாவிற்கு இல்லை என்றும் புடின் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, பல நாடுகள் நம்முடன் போரில் ஈடுபட்டுள்ளன, அனைத்து நேட்டோ நாடுகளும் நம்முடன் போரில் ஈடுபட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள புடின்,
ரஷ்யா மீது 30,000 தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், மேற்கு நாடுகளால் நம்மைத் தனிமைப்படுத்த முடியாமல் போனது என்றார். உக்ரைனுக்கு Tomahawk ஏவுகணைகளை அமெரிக்கா அளிக்கும் என்றால், கண்டிப்பாக போரின் போக்கு புதிய கட்டத்திற்கு செல்லும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |