5ம் தலைமுறை Su-57 போர் விமானங்களை வழங்க தயார்: இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த தலைவர்
ரஷ்யாவுடன் இணைந்து 5ம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க இந்தியாவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவிற்கு புடின் அழைப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுடன் இணைந்து மீண்டும் ரஷ்யாவின் 5ம் தலைமுறை Stealth போர் விமானமான சுகோய் சு-57(Sukhoi Su-57)-ஐ தயாரிக்க தயாராக இருப்பதாக அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி புடின், Sukhoi Su-57 போர் விமானம் மட்டுமின்றி பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் முக்கிய இராணுவ தளவாடங்களை வழங்கவும் ரஷ்யா தயாராக இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார்.
5ம் தலைமுறை விமானங்களை இணைந்து தயாரிக்கும் FGFA என்ற 11 ஆண்டுகள் ஒப்பந்த திட்டம் இந்தியா - ரஷ்யா இடையே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இந்தியா அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.
இது குறித்தும் பேசிய புடின், இதற்கு முன்னதாக இந்தியாவும் -ரஷ்யாவும் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றி வந்தோம், ஆனால் அப்போது இந்தியா தாங்களே இதை முன்னெடுத்து செல்ல இருப்பதாகவும், கூட்டு முயற்சியை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தது.
5ம் தலைமுறை தொழில்நுட்பத்தை நாங்கள் தற்போது தனியாக தயாரித்து விட்டாலும், மீண்டும் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாடு
ரஷ்யாவின் அழைப்பு இந்தியாவிற்கு ஆர்வத்தை துண்டினாலும், தற்போது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் உள்நாட்டு தயாரிப்பு திறன் அதிகரிப்பு ஆகியவை இந்தியாவின் முக்கிய நிலைப்பாடாக உள்ளது.
இந்தியாவின் சொந்த தயாரிப்பு திட்டமான AMCA 2030 ம் ஆண்டின் நடுப்பகுதியிலேயே பயன்பாட்டிற்கு வரும் என்பதால் ரஷ்யாவின் இந்த அழைப்பு சிறந்த வாய்ப்பாகவும் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |