பயப்படவேண்டாம்... ஐரோப்பாவுக்கு புடின் கூறியுள்ள செய்தி
ஐரோப்பா ரஷ்யாவைப் பார்த்து பயப்படவேண்டாம் என்று கூறியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதியான புடின்.
பயப்படவேண்டாம்...
ரஷ்ய ஜனாதிபதியான புடின், ஐரோப்பா ரஷ்யாவைப் பார்த்து பயப்படவேண்டாம் என்றும், ஐரோப்பாவைத் தாக்கும் திட்டம் எதுவும் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

உக்ரைன் ஊடுருவல் மற்றும் பக்கத்து நாடுகளுக்குள் ஏவுகணைத் தாக்குதல்கள் என அச்சுறுத்தும் சூழலுக்கு நடுவில் புடின் இப்படி கூறியுள்ளது வேடிக்கைதான்.
ஏனென்றால், கடந்த வாரம்தான் ரஷ்ய உளவு கப்பலான, The Yantar என்னும் ஸ்கொட்லாந்துக்கு அருகே காணப்பட்டது. அது கடலுக்கு அடியில் செல்லும் பிரித்தானியாவின் கேபிள்களை ரகசியமாக படம் பிடிப்பதற்காக அங்கு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் ஜேர்மனியும், நேட்டோ நாடுகளை ரஷ்யா தாக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.
ஜேர்மனி, பிரித்தானியா முதலான நாடுகள் ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து தங்கள் ராணுவங்களை வலுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இப்படிப்பட்ட சூழலில்தான், ஐரோப்பா பயப்படவேண்டாம் என்று கூறியுள்ளார் புடின். ஆனாலும், ரஷ்யா ஏவுகணைகளை தயாரித்து குவிப்பதை நிறுத்தியதுபோல தெரியவில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |