புடினுடன் நெருங்கிய தொடர்புடைய தொழிலதிபரின் ஆடம்பர வில்லா பறிமுதல்: அதிரடி நடவடிக்கை எடுத்த நாடு
தடை செய்யப்பட்ட கோடீஸ்வரர் போரிஸ் ரோட்டன்பெர்க்கின் வில்லாவை பின்லாந்து பறிமுதல் செய்துள்ளது.
போரிஸ் ரோட்டன்பெர்க்
2022யில் உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ரஷ்ய தொழிலதிபரான போரிஸ் ரோட்டன்பெர்க் (Boris Rotternberg) ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். 
அதன் பின்னர் விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியான அவரின் பின்லாந்து சொத்துக்கள் முடக்கப்பட்டது.
சொத்துக்களின் உரிமை முறையாக அவரிடமே இருக்கும். ஆனால், அவர் அதனை விற்கவோ, அடமான வைக்கவோ அல்லது வேறுவிதமாக அப்புறப்படுத்தவோ முடியாது.
இந்த நிலையில் சொத்து முடக்கத்தான் மற்றொரு நடவடிக்கையாக, ரோட்டன்பெர்க்கிற்கு சொந்தமான ஹாங்கோ நகரில் உள்ள ஒரு கடற்கரையோர வில்லாவை பின்லாந்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 
சொத்து வரி
ரோட்டன்பெர்க், செலுத்தப்படாத பல ஆயிரம் யூரோக்கள் சொத்து வரி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் தடைக் கட்டுப்பாடுகள் காரணமாக, பின்லாந்து வங்கிக் கணக்குகளுக்குப் ரோட்டன்பெர்க் பணத்தை மாற்ற முடியவில்லை என்று Yle ஊடகம் கூறியது.
பறிமுதல் செய்யப்பட்ட ஹாங்கோ வில்லா தொடர்பான நிலைமை தற்போது மதிப்பாய்வில் உள்ளது என்றும், கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ரோட்டன்பெர்க்கின் வழக்கறிஞர் தெரிவித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |