விளாடிமிர் புடினின் நம்பிக்கைக்குரிய முக்கிய அதிகாரி... இரத்தவெள்ளத்தில் சடலமாக: நீடிக்கும் மர்மம்

Vladimir Putin Russian Federation
By Arbin Jun 22, 2022 08:00 PM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதிக்கான அணு ஆயுத பெட்டகத்தை உடன் எடுத்துச் செல்லும் முக்கிய அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரியான 53 வயது வாதிம் ஜிமின் என்பவரே, அவரது குடியிருப்பில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளார்.

உளவுத்துறையில் இருந்து வெளியேறிய பின்னர் சுங்கத்துறையில் பணியாற்றி வந்துள்ளார் வாதிம் ஜிமின். இந்த நிலையில் தமது புதிய பணியில் அவர் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டும் வந்துள்ளார்.

விளாடிமிர் புடினின் நம்பிக்கைக்குரிய முக்கிய அதிகாரி... இரத்தவெள்ளத்தில் சடலமாக: நீடிக்கும் மர்மம் | Putin Colonel Nuclear Briefcase Gunned Down

ரஷ்ய உளவுத்துறையில் பணியாற்றிய காலகட்டத்தில், ஜனாதிபதிக்கான அணு ஆயுத பெட்டகத்தை உடன் எடுத்துச் செல்லும் அதிகாரியாக செயல்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் ஆட்சி காலத்தில் தொடர்புடைய பணிக்கு அமர்த்தப்பட்ட வாதிம் ஜிமின், பின்னர் விளாடிமிர் புடின் ஆட்சியிலும் குறித்த பணியை தொடர்ந்துள்ளார்.

உளவுத்துறையில் இருந்து வெளியேறிய பின்னர் சுங்க அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையிலேயே துப்பாக்கி குண்டு காயங்களுடன் தமது குடியிருப்பின் சமையலறையில் சடலமாக மீட்கபட்டுள்ளார் வாதிம் ஜிமின்.

தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது சகோதரரே சடலத்தை முதன்முதலில் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

விளாடிமிர் புடினின் நம்பிக்கைக்குரிய முக்கிய அதிகாரி... இரத்தவெள்ளத்தில் சடலமாக: நீடிக்கும் மர்மம் | Putin Colonel Nuclear Briefcase Gunned Down

சுங்கத்துறையில் மூத்த அதிகாரியாக சேர்ந்த பிறகு லஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜிமின் குற்றவியல் விசாரணையை எதிர்கொண்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

Cheget என ரஷ்ய மொழியில் அறியப்படும் அந்த அணு ஆயுத பெட்டகமானது 1980 தொடக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் 2019ல் தாம் முதன் முறையாக உலகிற்கு அதன் வடிவம் தொடர்பில் வெளியிடப்பட்டது.

விளாடிமிர் புடினின் நம்பிக்கைக்குரிய முக்கிய அதிகாரி... இரத்தவெள்ளத்தில் சடலமாக: நீடிக்கும் மர்மம் | Putin Colonel Nuclear Briefcase Gunned Down

மட்டுமின்றி, அந்த பெட்டகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பிலும் முதன்முதலாக செய்தி ஊடகத்தில் காட்டப்பட்டது. மேலும், விளாடிமிர் புடின் எங்கே பயணம் மேற்கொண்டாலும், குறித்த பெட்டியை அதிகாரி ஒருவர் எடுத்துச் செல்வார்.

பெட்டியானது ரஷ்ய ஜனாதிபதி உட்பட மூன்று முக்கிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முக்கிய தருணத்தில் மூவரும் கலந்தாலோசித்து முடிவெடுக்கவே இந்த ஏற்பாடு என கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US