இந்தியாவை உலுக்கிய குஜராத் பாலம் விபத்து! ரஷ்ய ஜனாதிபதி புடின் வெளியிட்ட அறிக்கை
குஜராத் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 141 பேர் பலியாகினர்
குஜராத் கோர விபத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்
இந்திய மாநிலம் குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் மோர்பி நகரில் ஆறு மாதங்களுக்கு பின்னர் தொங்கு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் கூட்டம் அதிகமான நிலையில் பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த சோக சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலர் தங்கள் வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
'மதிப்பிற்குரிய திருமதி.ஜனாதிபதி, திரு.பிரதமர் அவர்களுக்கு, குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததன் துயரமான விளைவுகள் குறித்து எங்களின் ஆழ்ந்த இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தையும், ஆதரவையும் தெரிவிக்கவும் மற்றும் பேரழிவில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
Getty Images
இதேபோல் போலந்தின் வெளியுறவு அமைச்சர், நேபாளத்தின் பிரதமர், அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஆகியோரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.