அவர் தைரியமானவர்... வெளிப்படையாக புகழ்ந்த விளாடிமிர் புடின்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவரை வெளிப்படையாக புகழ்ந்துள்ளார்.
எந்த அவமானமும் இல்லை
ரஷ்யாவின் சோச்சி நகரில் பேசிய புடின், அமெரிக்க மக்கள் யாரை நம்பி தலைவராக தெரிவு செய்கிறார்களோ அவருடனும் நாங்கள் பணியாற்றுவோம் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Trump is a courageous person – Putin says he was impressed by Trump's behavior during assassination attempt pic.twitter.com/OCxvitnbjR
— RT (@RT_com) November 7, 2024
மேலும், டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை என்றார்.
ஏனென்றால், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் பலர் திடீரென்று நிறுத்தும் வரையில் ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு கட்டத்தில் தம்மை தொடர்புகொண்டு பேசியதாக குறிப்பிட்டுள்ள புடின்,
எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருப்பதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
அவரை தடுமாற வைத்தார்கள்
ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்ததாக கூறும் புடின், அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல் என்றார்.
ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார் என்றார்.
ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள். தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |