சமரசத்திற்கு வாய்ப்பில்லை... உக்ரைன் சமாதான ஒப்பந்தம் தொடர்பில் புடின் அதிரடி
உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை, சில விவகாரங்களில் சமரசத்திற்கு இடமில்லை என விளாடிமிர் புடின் கூறியதை அடுத்து சீர்குலைந்துள்ளது.
சமரசத்திற்கு இடமில்லை
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதானத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் உடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி, தமது முடிவில் மாற்றம் இல்லை என்றார்.

உக்ரைனின் தொழில்துறை மையமாக இருக்கும் கிழக்கு டான்பாஸ் பிரதேசத்தை ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை வைக்கும் விளாடிமிர் புடின், இதில் சமரசத்திற்கு இடமில்லை என்றார்.
குறித்த பகுதியில் 85 சதவீதம் தற்போது ரஷ்யா வசம் இருப்பதுடன், ரஷ்ய இராணுவம் அப்பகுதியில் முன்னேறி வருகிறது. அங்குள்ள உக்ரைன் இராணுவம் வெளியேற மறுத்தால், வலுக்கட்டாயமாக அப்பகுதியை மீட்கவும் தயார் என புடின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரித்தானியாவில் முடக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் 8 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்களை உக்ரைனுக்கு ஆதரவாக செலவிடுவது எவ்வாறு என ஸ்டார்மர் அரசாங்கம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

முடிவை எட்டவில்லை
அத்துடன், ஐரோப்பாவில் முடக்கப்பட்டுள்ள 79 பில்லியன் பவுண்டுகள் தொகையை உக்ரைனுக்கு செலவிடுவது தொடர்பிலும் தலைவர்கள் விவாதித்து வருகின்றனர்.
முன்னதாக ரஷ்ய ஜனாதிபதியுடன் அமெரிக்காவின் ஸ்டீவ் விட்காஃப் நடத்திய 5 மணி நேரப் பேச்சுவார்த்த எந்த முடிவையும் எட்டவில்லை.

அமெரிக்கா முன்வைத்துள்ள சமாதான ஒப்பந்தமானது சில திருத்தங்களுடன் உக்ரைன் ஏற்றுக்கொண்ட நிலையில், புடினால் மொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், புடின் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக தாங்கள் நம்புவதாக விட்காஃப் மற்றும் குஷ்னர் வெள்ளை மாளிகைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |