புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம்
விளாடிமிர் புடினின் மிகவும் நம்பகமான வட்டாரம் அவரது ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டி வருவதால், அவர் ஒரு மோசமான கட்டத்தை நோக்கி நகர்வதாக நெருக்கமான உள்வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ரஷ்யத் தலைவருக்கு எதிராக
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பிற்குள் உரசல் உச்சகட்டத்தை அடைந்து வரும் நிலையில், புடினைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான ஒரு திட்டத்தை ரஷ்யாவின் மூத்த தலைவர்கள் வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

விளாடிமிர் புடினின் முக்கிய விமர்சகரான இகோர் எய்ட்மன், பல தசாப்தங்களில் முதன்முறையாக, அதிகாரச் சமநிலை நீண்டகாலமாகப் பதவியில் இருக்கும் ரஷ்யத் தலைவருக்கு எதிராகத் திரும்பத் தொடங்கியிருப்பதாகக் கருதுகிறார்.
மேலும், அவருடைய உள்வட்டத்தின் விருப்பங்கள் புடினின் இலக்குகளுடன் அடிப்படையில் ஒத்துப்போகவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
மட்டுமின்றி, தங்கள் சொந்த செல்வங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவப் பிரமுகர்கள் புடினுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதால்,
அவர் Operation Twilight எனப்படும் அதிகாரப் போராட்டத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று எஸ்டோனியா உளவுத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முன்னெப்போதும் இல்லாத மாற்றம், நிர்வாகத்திற்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும் என்றே இகோர் எய்ட்மன் குறிப்பிடுகிறார்.
ரஷ்யாவில் புடினின் அதிகாரப் பிடிப்புக்கு, பெரும் செல்வந்தர்களும் முக்கிய வணிகப் பிரமுகர்களும் வரலாற்று ரீதியாகவே அடிப்படையாக இருந்து வந்துள்ளனர்.
இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது நடத்தப்பட்ட படையெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்நாட்டின் மிகப் பெரும் செல்வந்தர்கள் பலரும் தங்கள் செல்வவளம் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவதைக் கண்டுள்ளனர்.

யுத்தம் முடிவுக்கு வர வேண்டும்
ரஷ்ய எழுத்தாளரும் ஆய்வாளருமான மாக்சிம் கலாஷ்னிகோவ், கிரெம்ளின் தலைமைக்கும் ஆளும் மற்றும் வணிக உயரடுக்கினரின் சில பிரிவுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பிளவைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளுக்குச் சுதந்திரமாகப் பயணம் மேற்கொள்ளவும், பொருளாதாரத் தடைகள் குறித்த அச்சமின்றி இருக்கவும், ஹைட்ரோகார்பன்களை விற்பனை செய்யவும், ஐரோப்பியச் சந்தையை மீண்டும் கைப்பற்றவும் அந்தப் பழைய நல்ல காலங்கள் மீண்டும் திரும்புவதற்காகவே இந்த யுத்தம் முடிவுக்கு வர வேண்டும் என்று பெரும் செல்வந்தர்கள் பெரிதும் விரும்புவதாக மாக்சிம் கலாஷ்னிகோவ் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ரஷ்யாவின் வெளிநாட்டுக் கடன் ஏறக்குறைய 62 பில்லியன் டொலராக உயர்ந்து, கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.
மேலும், உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதியளிக்கக் கூடுதல் நிதியைப் பெற ரஷ்யா நிர்பந்திக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் துறைகள் இரண்டையும் உள்ளடக்கிய நாட்டின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடன், 2025-ஆம் ஆண்டில் 10.4 சதவீதம் உயர்ந்து 319.8 பில்லியன் டொலரை எட்டியுள்ளதாக ரஷ்யாவின் மத்திய வங்கி கணக்கிட்டுள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரிய இரயில்வே அமைப்பும் நிதிச் சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட நான்கு டிரில்லியன் ரூபிள்களாக (32 பில்லியன் பவுண்டுகள்) கடன் உயர்ந்துள்ளதால், ரஷ்ய ரயில்வே தனது செயல்பாட்டைத் தக்கவைக்கப் போராடி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |