பிரித்தானிய, ஐரோப்பிய விமான நிலையங்கள் ஸ்தம்பிக்க காரணம் அந்த நாடு: நிபுணர்கள் வெளிப்படை
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதன்மையான விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா செயல்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
விமானங்கள் ரத்து
சைபர் குற்றவாளிகள் முன்னெடுத்த இந்த தாக்குதல் ஹீத்ரோ, பிரஸ்ஸல்ஸ் மற்றும் பெர்லின் விமான நிலையங்களில் செயல்பாடுகளை கடுமையாக பாதித்தது. பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் தானியங்கி அமைப்புகள் ஸ்தம்பிக்க, பயணிகள் செய்வதறியாது தவித்துள்ளனர்.
இதனையடுத்து விமான நிலைய ஊழியர்கள், பயணிகள் ஒவ்வொருவராக சரிபார்த்து அனுமதிக்கவே பல மணி நேர தாமதமாகியுள்ளது. இதனால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட, பல விமானங்கள் ரத்து செய்யும் நிலையும் ஏற்பட்டது.
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதங்கள் ஏற்படாலம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
சந்தேகத்திற்கு இடமின்றி
இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் நிபுணர்களும் பாதுகாப்பு ஆய்வாளர்களும் இது நேட்டோ நாடுகளை குறிவைத்து ரஷ்யாவால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று நம்புகின்றனர்.
பாதுகாப்பு மற்றும் அரசியல் நிபுணர் அந்தோணி க்ளீஸ் தெரிவிக்கையில், சந்தேகத்திற்கு இடமின்றி, லண்டன், பெர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையங்கள் மீதான இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் ரஷ்யர்கள் உள்ளனர் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |