ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மாயம்: பின்னணியில் புடின் மகள்?
ரஷ்ய வெளியுறவு அமைச்சரைக் காணாததால் கிரெம்ளினில் பதற்றம் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அந்த விடயத்தின் பின்னணியில் புடினுடைய மகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மாயம்
கடந்த சில மாதங்களாக ரஷ்யாவில் முக்கிய நபர்கள் மாயமாகிவருகிறார்கள். சிலர் ஜன்னலிலிருந்து குதித்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள், சிலர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.

சிலரது உடல்கள் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. குறிப்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சரான Roman Starovoit தன் காரின் அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergey Lavrov மாயமாகியுள்ளார்.
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல்
புதன்கிழமை நடந்த அணு ஆயுத சோதனை தொடர்பான கூட்டத்தில் Sergey Lavrov பங்கேற்கவில்லை.

அத்துடன், தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் G20 மாநாட்டுக்கான ரஷ்ய பிரதிநிதிகளின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் Sergey Lavrov.
ஆக, ரஷ்யாவில் முக்கிய நபர்கள் மாயமாகிவரும் நிலையில், Sergey Lavrovக்கும் அதே கதி ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பின்னணியில் புடின் மகள்
இந்நிலையில், Sergey Lavrov மாயமானதன் பின்னணியில் புடினுடைய மகளான கேத்தரினா (Katerina Tikhonova, 39) இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஏற்கனவே கேத்தரினா, கிரெம்ளினுக்குள் Sergey Lavrovஇன் இடத்தைப் பிடிப்பதற்காக அவரை வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுவந்ததாக கிரெம்ளின் வட்டாரத்தைச் சேர்ந்த மூத்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.
புடின் ஆற்றும் உரைகளை எழுதிக்கொடுப்பவரான அப்பாஸ் (Abbas Gallyamov) என்பவர் கூறும்போது, Sergey Lavrovஐக் கவிழ்ப்பதற்காக கேத்தரினா முயன்று வருவது குறித்து ஆறு மாதங்களாகவே வதந்திகள் உலவிவருகின்றன என்கிறார்.

உக்ரைன் போர் விடயத்தை Sergey Lavrov மோசமாக்கிவருவதாக புடினிடம் கேத்தரினா பலமுறை கூறிவருவதாக கூறப்படும் நிலையில், கடைசியாக புடின் மகளுடைய கூற்றுக்கு செவிகொடுத்திருக்கலாமோ என சந்தேகம் எழுப்பியுள்ளார் அப்பாஸ்.
ஏற்கனவே புடின் தனக்குப்பின் ரஷ்யாவை ஆள கேத்தரினாவைத்தான் தேர்ந்தெடுப்பார் என்றும் வதந்திகள் உலவிவரும் நிலையில், Sergey Lavrov மாயமான விடயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |