உக்ரைன் போர் முடியவேண்டுமானால் இது நடக்கவேண்டும்: உளவுத்துறை முன்னாள் தலைவர் கருத்து
புடின் கொல்லப்பட்டால்தான் உக்ரைன் போர் முடிவுகு வரும் என்று கூறியுள்ளார் அமெரிக்க உளவுத்துறை முன்னாள் தலைவர் ஒருவர்.
புடின் சீக்கிரம் பதவியிழப்பார்
புடின் சீக்கிரம் பதவியிழப்பார் என்று கூறியுள்ள அமெரிக்க உளவுத்துறை முன்னாள் தலைவரான James Olson, புடின் கொல்லப்பட்டால்தான் உக்ரைன் போர் முடிவுக்குவரும் என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் வெற்றி பெறும் நிலையில் இப்போது இல்லை என்று கூறியுள்ள James Olson, இந்தப் போரில், ஒன்றில் இருதரப்புக்குமே வெற்றி கிடைக்காது அல்லது புடின் இறந்தால் போர் முடிவுக்கு வரும் என்ற நிலைதான் காணப்படுகிறது என்கிறார்.
புடின் பதவியிலிருக்கும்வரை அவர் போரில் விட்டுக்கொடுக்கமாட்டார் என்று கூறும் James Olson, ஆகவே, போரை முடிப்பதற்கான வழி புடின் கொல்லப்படுவது அல்லது அவரது பதவியைப் பறிப்பதுதான் என்கிறார்.