பக்கத்து நாட்டுக்கு திகிலை ஏற்படுத்த புடின் இறக்கியுள்ள ராட்சத பலூன் வகை விமானங்கள்
அணுகுண்டு வீசுவதாக அவ்வப்போது மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி புடின், தற்போது பக்கத்து நாடு ஒன்றையும், எதிரணியிலுள்ள மேற்கத்திய நாடுகளையும் பயமுறுத்துவதற்காக புதிய விடயம் ஒன்றைக் கையில் எடுத்துள்ளார்.
புடின் இறக்கியுள்ள ராட்சத பலூன் வகை விமானங்கள்
ஆம், ரஷ்யாவை ஒட்டி அமைந்துள்ள எஸ்தோனியா நாட்டின் எல்லையில் அவ்வப்போது blimp என்னும் Zeppelin வகை விமானங்கள் பறக்கவிடப்படுகின்றனவாம்.
முதன்முதலான இந்த ராட்சத பலூன் வகை விமானம் ஒன்று எல்லையில் காணப்படுவதைக் கண்ட எஸ்தோனிய அதிகாரிகள், முதலில் அதைக் குறித்து பெரிதாக கவலைப்வில்லையாம்.
ஆனால், இப்போது வாரம்தோறும் ஒரு பலூன் வகை விமானம், புடின் உக்ரைனை ஊடுருவியதற்கு அடையாளமாக கருதப்படும் Z என்ற எழுத்துடன் எஸ்தோனிய வான்வெளிக்குள் பறக்கிறதாம்.
தங்களை அச்சுறுத்துவதற்காகவே புடின் இந்த விமானங்களை எல்லையில் பறக்கவிடுவதாக எஸ்தோனிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
முன் சோவியத் யூனியனில் இருந்த நாடுகளை ஒவ்வொன்றாக மீண்டும் ரஷ்யாவுடன் இணைக்கவேண்டும் என்ற ஆசை புடினுக்கு இருப்பதாக கருதப்படுகிறது.
இதற்கிடையில், எஸ்தோனியாவையும் ரஷ்யாவுடன் இணைப்பது நியாயமான விடயம் என 2022ஆம் ஆண்டு புடின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.