73 வயதில் வாகன ஓட்டும் திறனை வெளிப்படுத்திய புடின்
Vladimir Putin drove a new Russian SUV: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய காரினை சோதித்து பார்க் ஓட்டினார்.
புத்துயிர் பெற்ற கார் பிராண்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய SUV காரை ஓட்டினார்.
வோல்காவின் முதன்மை கார்
K50 மொடல் கார் என்பது வோல்காவின் முதன்மை கார் ஆகும். ரஷ்யாவின் சோவியத் கால தொழில்துறையில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாக இருந்த இந்த பிராண்ட் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.
முன்னர் Volkswagen-ஆல் இயக்கப்பட்ட ஒரு ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த கார், சீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.
தனது தொடர் பயணங்களின் இடையே ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin), இந்த ஆலையைச் சுற்றிப் பார்த்தார்.
சோதனை ஓட்டம் செய்த புடின்
மேலும், நிஸ்னி நோவ்கோரோட்டில் வோல்கா K50 SUV காரை சோதனை ஓட்டம் செய்தார். வோல்கா ஆலையில் உள்ள உற்பத்தி கட்டிடங்களுக்கு இடையே காரை ஓட்டிய புடினுடன் நிறுவன ஊழியரும் பயணி இருக்கையில் அமர்ந்திருந்தார்.
1991-யில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, தனது வருமானத்தை அதிகரிக்க புடின் வாடகைக்கார் ஓட்டுநராக பணியாற்றியிருக்கிறார்.
மேலும் கிரெம்ளினின் கூற்றுப்படி, புடின் நவம்பர் 2010-யில் ஒரு ரெனால்ட் ஃபார்முலா 1 காரை, மணிக்கு 240 கிலோ மீற்றர் வேகத்தில் ஓட்டினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |