அடுத்த 5 ஆண்டுகளில்... ரஷ்ய ஜனாதிபதி புடினின் சில்லிட வைக்கும் திட்டங்கள் அம்பலம்
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மெளன ஆதரவு காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தமது திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றுவார் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ரஷ்யாவுக்கு ஆதரவாக
உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டில் எட்டியுள்ள நிலையில், வழக்கத்திற்கு மாறாக ரஷ்யாவை ஆதரிக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தால் விளாடிமிர் புடின் தமது கனவை நிறைவேற்றுவார் என்றே கூறப்படுகிறது.
மேலும், உக்ரைன் போரை கண்டிக்கும் ஐ.நா. பிரேரணை மீது ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா, பெலாரஸ் நாடுகளுடன் முதல் முறையாக அமெரிக்கா வாக்களித்துள்ளது.
மட்டுமின்றி, ஏற்கனவே ரஷ்யாவும் அமெரிக்காவும் முன்னெடுத்த பேச்சுவார்த்தையில், போரை முடிவுக்கு கொண்டுவர, பாதுகாப்பு உத்தரவாதங்களைக் கைவிடுவது, நேட்டோ உறுப்பினர் மறுப்பு மற்றும் ரஷ்யா கைப்பற்றியுள்ள பிராந்தியங்களை விட்டுக்கொடுத்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்து உக்ரைனை கட்டாயபப்டுத்துவது என்றே முடிவானதாக தகவல் கசிந்துள்ளது.
அத்துடன் அடுத்த 3 மாதங்களில் சில முக்கிய விடயங்கள் ரஷ்யாவுக்கு சாதகமாக அமையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் மே மாதம் ரஷ்ய செய்தி ஊடகமான RT மீதான தடைகள் நீக்கப்படும், ஐரோப்பா முழுவதும் ரஷ்ய அரசாங்கத்தின் கருத்துகள் அனைத்தும் சரிபார்க்கப்படாமல் வெளியிடப்படும்.
ஜூலை மாதம் நேட்டோ உறுப்பு நாடுகளான போலந்து மற்றும் லிதுவேனியா எல்லையில், ரஷ்யா தனது மிகப்பெரிய நட்பு நாடான பெலாரஸில் ராணுவ பயிற்சிகளை நடத்த உள்ளது.
உக்ரைனில் நடக்கும் சண்டைகளுக்கு மத்தியில் இரு அண்டை நாடுகளும் தங்கள் இராணுவ உறவுகளை விரிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். நேட்டோ உறுப்பு நாடுகளான லாத்வியா, லிதுவேனியா மற்றும் போலந்தின் எல்லையில் அமைந்துள்ள பெலாரஸில் ரஷ்ய இராணுவக் கட்டமைவு என்பது சாத்தியமான தாக்குதலுக்கு களம் அமைக்கலாம் என்று ஜெலென்ஸ்கி இந்த மாத தொடக்கத்தில் எச்சரித்திருந்தார்.
ஐரோப்பிய நாடுகள்
ஆனால் நேட்டோ உறுப்பு நாடுகளின் மீது ஊடுருவும் திட்டம் இல்லை என்றே ரஷ்யா மறுத்து வருகிறது. அக்டோபர் 2026ல் வடகொரிய வீரர்களை முன்வைத்து மால்டோவா மீது படையெடுக்க புடின் திட்டமிட்டுள்ளார்.
உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளின் நெருக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று ரஷ்ய உயரடுக்கு அதிகாரிகள் மால்டோவாவை மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தி வந்துள்ளனர்.
2029 மே மாதம் ரஷ்ய ஆதரவு நாடுகளான ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி அரசாங்கங்கள் தங்கள் நிலத்தில் ரஷ்ய இராணுவ தளங்கள் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளும். 2029 டிசம்பரில், நெதர்லாந்தும் ஜேர்மனியும் தன்னார்வ இராணுவ ஆட்சேர்ப்பை ரத்துசெய்து, கட்டாய ஆட்சேர்ப்பை மீண்டும் நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டாய இராணுவ சேவை என்பது தற்போது சைப்ரஸ், கிரீஸ், ஆஸ்திரியா, லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகளில் அமுலில் உள்ளது.
ரஷ்யாவால் பிரித்தானியா உட்பட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கட்டாய இராணுவ சேவை என்ற முடிவுக்கு வரும் என்றே கூறப்படுகிறது. 2030 செப்டம்பரில் நேட்டோ மீது சிறப்பு இராணுவ நடவடிக்கை ஒன்றை புடின் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
உக்ரைனை ஆக்கிரமித்து ஒரு பத்தாண்டுகளுக்குள் ரஷ்யப் படைகள் பின்லாந்து மற்றும் போலந்தின் மீது படையெடுக்கலாம் என்றே United24 என்ற அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |