ஒலிம்பிக் தொடக்க விழாவில் தூங்கிய புதின்: வைரலாகும் புகைப்படம்
குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டுள்ள ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின், உக்ரைன் நாட்டு வீரர்களின் அணிவகுப்பின் போது கண்களை மூடிக்கொண்டு தூங்கிய புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
போதைப்பொருள் விவகாரத்தில் ரஷ்ய வீரர் சிக்கி கொண்டதை தொடர்ந்து இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் ரஷ்யாவில் இருந்து பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் அவர்கள் நாட்டின் கோடி, தேசிய கீதம் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என அறிவிக்கப்பட்ட பின்னரும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
இதற்கு ரஷ்யா உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றமும், ரஷ்யா சீனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதுமே காரணம் என சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் உக்ரைன் அணியின் அறிமுக அணிவகுப்பிற்காக மைதானத்திற்குள் நுழைந்த போது ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் கைகளை கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு தூங்கிக்கொண்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.