இறுதியாக தனது சொந்த சட்டத்தை மீறிய புடின்!
உக்ரைன் மீதான படையெடுப்பை போர் என்று குறிப்பிட்டதால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது சொந்த சட்டத்தை மீறியுள்ளார்.
புடினின் சட்டம்
கடந்த 10 மாதங்களாக உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடர்ந்து வருகிறது. ஆனால், போர் என்று குறிப்பிடாமல் ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று புடின் கூறி வந்தார்.
மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பை போர் என்று கூறக்கூடாது என்றும், அதனை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் சட்டம் இயற்றினார்.
@Kremlin.ru/east2west news
ரஷ்யாவின் படையெடுப்பை போர் என்று விவரித்ததால் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் தண்டிக்கப்பட்டனர். மேலும் சிலருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தனது சட்டத்தையே மீறிய புடின்
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புடின், 'எங்களின் குறிக்கோள் ராணுவ மோதலின் இந்த சக்கரங்களை அவிழ்ப்பது அல்ல, மாறாக இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதே ஆகும். நாங்கள் அதற்காக பாடுபடுவோம்' என்று கூறினார்.
உக்ரைன் மீதான படையெடுப்பை முதல் முறையாக ''போர்'' என்று புடின் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் தனது சொந்த சட்டத்தையே மீறியுள்ளார்.
தந்திரம் என அஞ்சும் உக்ரைன்
புடினின் இந்த கருத்துக்கள் மோதலை நிறுத்துவதற்காக அவர் விரும்புவதை குறிப்பதாக தோன்றின. ஆனால் உக்ரைனும், புடினின் ரஷ்ய எதிரிகளும் இது ஒரு தந்திரம் என்று அஞ்சுகிறார்கள்.
எனினும், ரஷ்யர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதை தடுக்கும் தனது சொந்த சட்டத்தையே புடின் மீறியுள்ளதால், அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
எவ்வாறாயினும், புடினின் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய வழக்கறிஞர்கள் அல்லது நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக அத்தகைய வழக்கை தொடர வழி இல்லை.
ஆனால், அவர் போர் என்ற வார்த்தையை வெளிப்படையாகப் பயன்படுத்திய பின்னர், அவரது அபத்தமான சட்டம் இப்போது சீர்குலைந்துள்ளது.
இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny-யின் நெருங்கிய கூட்டாளியான Ivan Drobotov அதிகாரிகளிடம் புடின் போர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது குறித்து முறையிட்டார்.