சிங்கம், பழுப்புகள் கரடிகளை பரிசளித்த புடின்! வட கொரியாவுக்கு ரஷ்ய அமைச்சர் சுற்றுப்பயணம்
வடகொரியாவின் உயிரியல் பூங்காவுக்கு சிங்கம் மற்றும் பழுப்பு நிற கரடிகளை பரிசாக ரஷ்ய ஜனாதிபதி புடின் வழங்கியுள்ளார்.
வன விலங்குகளை பரிசளித்த புடின்
வட கொரியா நாட்டின் உயிரியல் பூங்காவுக்கு கிட்டத்தட்ட 70 வனவிலங்குகளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரிசாக வழங்கியுள்ளார்.
பரிசளிக்கப்பட்ட இந்த 70 வனவிலங்குகளில் சிங்கம், இரண்டு பழுப்பு நிற கரடிகள், 2 யாக்ஸ்(yaks), 5 காக்டூக்கள்(cockatoos) மற்றும் டஜன் கணக்கான மாண்டரின் வாத்துகள்(Mandarin ducks) இடம்பெற்றுள்ளன.
இந்த பரிசளிப்பானது ரஷ்யா மற்றும் வட கொரியா இடையிலான வளர்ந்து வரும் நட்புறவின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
வட கொரியாவுக்கு ரஷ்ய அமைச்சர் சுற்றுப்பயணம்
சரக்கு விமானத்தின் உதவியுடன் புடினின் சுற்றுச்சூழல் அமைச்சர் அலெக்சாண்டர் கோஸ்லோவ் வன விலங்குகள் வட கொரியாவின் தலைநகருக்கு கொண்டு சென்றதாக கோஸ்லோவ்-வின் அலுவலகம் புதன்கிழமை டெலிகிராமில் தெரிவித்துள்ளது.
இந்த பரிசளிப்பானது, உக்ரைன் போரில் ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக வட கொரியா 1000 ராணுவ வீரர்களை அனுப்பி இருப்பதாக அமெரிக்கா மற்றும் தென் கொரியா அறிவித்த சில வாரங்களுக்கு பிறகு நடந்துள்ளது.
இந்த பயணத்தின் போது ரஷ்ய சுற்றுச்சூழல் அமைச்சர் கோஸ்லோவ் வட கொரிய ஜனாதிபதி ஜிம்முக்கு மரியாதை செலுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |