விளாடிமிர் புடினின் நெகிழ்ச்சி செயல்.... வாயடைத்துப்போன அமெரிக்கர்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தடையால் ஏற்பட்ட சிக்கல் குறித்து புகார் தெரிவித்த அமெரிக்கரை நெகிழ்ச்சி செயலால் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.
புடின் அளித்த பரிசு
அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் Mark Warren, இவருக்கே ரஷ்ய தயாரிப்பு புதிய Ural மோட்டார் சைக்கிள் ஒன்று விளாடிமிர் புடினால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதரக ஊழியரான Andrei Ledenev குறித்த மோட்டார் சைக்கிளை ஒப்படைத்துவிட்டு, இது ஜனாதிபதி புடினின் தனிப்பட்ட பரிசு என்றும் தெரிவித்துள்ளார்.
அலாஸ்கா மாகாணத்தின் Anchorage பகுதியிலேயே ட்ரம்பும் புடினும் உக்ரைன் தொடர்பில் நேரிடையாக சந்தித்து விவாதித்தனர். சந்திப்புக்கு முன்னர் ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்று தற்செயலாக Mark Warren-ஐ சந்தித்துள்ளது.
Mark Warren அப்போது பயன்படுத்திய மோட்டார் சைக்கிளானது Ural நிறுவனம் தயாரித்ததாகும். சோவியத் ரஷ்யாவில் 1941ல் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிலையில், தனது பைக்கிற்கான உதிரி பாகங்கள் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும்,
போர் முடிவுக்கு வந்தால்
தற்போது தயாரிப்பு நிறுவனம் உக்ரைனில் அமைந்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அலாஸ்காவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் போர் முடிவுக்கு வந்தால் தமக்கும் அது பயனுள்ளதாக அமையும் என மார்க் வாரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் ரஷ்ய ஜனாதிபதிக்கு தெரியவர, அவர் புதிய பைக் ஒன்றை மார்க் வாரனுக்கு பரிசாக அளித்துள்ளார். வெளியான தகவலில் Ural நிறுவனத்தின் பைக்குகள் அனைத்தும் கஜகஸ்தானில் உள்ள நிறுவனம் ஒன்றில் பொருத்தப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |