புடினை எதிர்த்தால் தலையை வெட்டி எடுத்துவிடுவேன் என்றவருக்கு...ரஷ்யாவின் நாயகன் பட்டம்
- ஆடம் டெலிம்கானோவ்-விற்கு ”ரஷ்யாவின் நாயகன்” என்ற பட்டத்தை புடின் வழங்கல்.
- ரம்ஜான் கதிரோவ்-வின்(Kadyrov) தனிப்பட்ட கொலை நிபுணர்.
-
புடினுக்கு எதிராக வருபவரின் தலையை அகற்றுவதாக ஆடம் எச்சரிக்கை.
உக்ரைனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த ஆடம் டெலிம்கானோவ்-விற்கு (Adam Delimkhanov) ரஷ்ய ஜனாதிபதி புடின் ”ரஷ்யாவின் நாயகன்” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேலான போர் தாக்குதல் 60 நாட்களை கடந்து தீவிர கட்டத்தை அடைந்து இருக்கும் நிலையில், இந்த போர் நடவடிக்கையில் ரஷ்ய ராணுவம் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து சகித்துகொள்ளமுடியாத அளவிற்கு அத்துமீறல்களை செய்து இருப்பதாக உலக நாடுகள் குற்றங்சாட்டி வருகிறது.
In this video, the "hero of #Russia" threatens to cut the heads of everyone who is against Putin's power. pic.twitter.com/ojMPfbq2ss
— NEXTA (@nexta_tv) April 26, 2022
இந்த நிலையில், உக்ரைனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தாக குற்றஞ்சாட்டப்படும் ஆடம் டெலிம்கானோவ்-விற்கு ”ரஷ்யாவின் நாயகன்”(Hero of Russia) என்ற பட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின்(PUTIN) வழங்கியுள்ளார்.
ஆடம் டெலிம்கானோவ், செச்சென் குடியரசின்(Chechen Republic)தலைவர் ரம்ஜான் கதிரோவ்-வின்(Kadyrov) தனிப்பட்ட கொலை நிபுணர் ஆவார்.
மேலும் இவர் செய்தியாளரை கொலை செய்தது, மற்றும் உக்ரைனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொலை செய்ததில் நேரடி தொடர்பு கொண்டவர்.
இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் புடினுக்கு எதிராக தலைதூக்கும் அனைத்து சக்திகளின் தலையையும் வெட்டி எடுத்துவிடுவேன் என எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.