கண் பார்வையை இழக்கும் புடின்... 3 ஆண்டுகள் கெடு விதித்த மருத்துவர்கள்: ரஷ்ய உளவாளி வெளிப்படை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது கண் பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் நிலையில், மருத்துவர்கள் அவருக்கு காலக்கெடு விதித்துள்ளதாக ரஷ்ய உளவாளி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
விளாடிமிர் புடினுக்கு மிகவும் நம்பகமான உளவு அமைப்பான FSB-ன் உறுப்பினர் ஒருவரே, புடினின் தற்போதைய பரிதாப நிலை குறித்து அம்பலப்படுத்தியுள்ளார்.
புடினுக்கு தற்போது புற்றுநோய் அபாய கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அதன் தாக்கம் அவரது நடவடிக்கைகளில் தெரிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விளாடிமிர் புடின் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் மட்டுமே இனி உயிருடன் இருப்பார் எனவும், கண் பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக அவர் இழந்து வருவது அதற்கான சாட்சியம் என FSB-ன் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சமீப மாதங்களாக அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுவதாகவும், தொலைக்காட்சிகளில் தோன்றினால், அவர் பேச முடிவு செய்துள்ள அனைத்தையும் வெள்ளை காகிதங்களில் பெரிய எழுத்துக்களாக தயாரித்து வைத்துக் கொள்வார் எனவும் கூறுகின்றனர்.
மட்டுமின்றி, அவருக்கு தற்போது கை கால்களில் அவ்வப்போது நடுக்கம் ஏற்படுவதாகவும், கட்டுப்படுத்த முடியாமல் அவர் தடுமாறுவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, விளாடிமிர் புடினின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார் பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதர் Andrei Kelin.