சரணடையுங்கள் அல்லது மரணம் உறுதி... உக்ரைனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த புடின்
எதிர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் உக்ரைன் படைகள் தாம் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ளும் முன்னர் சரணடைய வேண்டும் என்று விளாடிமிர் புடின் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில்
சவுதி அரேபியாவில் சுமார் 9 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் 30 நாட்கள் போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றை அமெரிக்காவும் உக்ரைனும் இறுதி செய்தது. ஆனால் குறித்த முடிவை ரஷ்யா நிராகரித்துள்ளது.
இப்படியான ஒரு முடிவுக்கு வந்த ஜனாதிபதி ட்ரம்புக்கு நன்றி தெரிவித்துள்ள விளாடிமிர் புடின், தற்போதைய வடிவத்தில் தம்மால் அதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தின் காரணம் கண்டறியப்படு அதை அப்புறப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ள புடின், தற்போதைய முன்மொழிவில் அது குறிப்பிடப்படவில்லை என்றார்.
குர்ஸ்க் பிராந்தியத்தில், உக்ரைன் படைகளின் எதிர் தாக்குதலை ரஷ்ய வீரர்கள் முறியடித்து வருவதாகவும், நிலைமை முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது, மேலும் ரஷ்ய பிரதேசத்தை ஆக்கிரமித்த குழு முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மட்டுமின்றி, உக்ரேனிய துருப்புக்கள் இனி அந்தப் பகுதியை விட்டு வெளியேற முடியாது, அவர்கள் சரணடைய வேண்டும் அல்லது இறக்க வேண்டும் என புடின் குறிப்பிட்டுள்ளார்.
எந்த முக்கியத்துவமும் இல்லை
இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் Yuri Ushakov தெரிவிக்கையில், தற்போதைய போர் நிறுத்த திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை, அதில் எங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்றார்.
மேலும், உக்ரைன் மீண்டும் வலுப்பெறவும், எதிர்காலத்தில் ரஷ்யா மீது படையெடுக்க இன்னொரு வாய்ப்பை வழங்குவது போல் உள்ளது என்றார். மட்டுமின்றி, ரஷ்யாவின் நலன்களையும் கவலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒரு நீண்டகால அமைதியான தீர்வை புடின் விரும்புகிறார் எனவும் Yuri Ushakov தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன் போர் தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்ற ரஷ்யாவை அமெரிக்காவால் வற்புறுத்த முடியும் என்று தாம் நம்பவில்லை என பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே ரஷ்யாவின் அடிப்படையான திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |