நள்ளிரவில் திடீரென புடினுடைய படுக்கையறைக்குள் நுழைந்த மருத்துவர்கள்... நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தயாராக போலி புடின்
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீரென ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பரபரப்பாக மருத்துவர்கள் அவரது அறைக்குள் நுழைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புடின் கடுமையான குமட்டல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவரது அறைக்கு விரைந்த மருத்துவர்கள், சுமார் மூன்று மணி நேரம் அவர் அருகிலேயே இருந்து அவரைக் கவனித்துக்கொண்டதாகவும் ரஷ்ய அரசு ஆதரவு சேனல் தெரிவித்துள்ளது.
புடின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவரைப் போலவே தோற்றமளிக்கும் அவரது ‘டூப்’ புடினுக்கு பதிலாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.
உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே புடின் மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியான நிலையில், சமீபத்தில் பிரித்தானிய உளவுத்துறைத் தலைவர், புடினுக்கு மோசமான உடல் நல பாதிப்பு உள்ளது என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், புடினுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Photograph: Sputnik/Reuters