இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் ரஷ்யா: அமைதி நிலைப்பாட்டின் பின்னணி!
உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் அமைதி நிலைப்பாட்டிற்கு, ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் அதிகப்படியான போர் ஆயுதங்களே காரணம் என பகிரங்கமான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு அமெரிக்கா அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் போன்ற பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து பொருளாதார தடைகளையும், உலக நாடுகளின் சபைகளில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானங்களையும் நிறைவேற்றி வருகின்றனர்.
ஆனால் இத்தகைய எந்தவொரு நடவடிக்கையையும் இந்தியா ரஷ்யா மீது முன்னெடுக்காத நிலையில், அதற்கு இந்தியாவின் ஆயுத தேவையே காரணம் என பகிரங்கமாக சொல்லப்பட்டுவருகிறது.
அதிலும் சீனாவின் படை பலத்தை சமாளிக்க இந்தியாவிற்கு அதிகப்படியான ரஷ்ய ஆயுதங்கள் தேவைப்படுகிறது, இப்போல இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானின் அச்சுறுத்தலை சமாளிக்கவும் இந்தியாவிற்கு ரஷ்ய ஆயுதங்கள் தேவைப்படுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து பெரும் ஆயுதங்களை தவிர்த்து, மற்ற நாடுகளில் ஆயுதங்களை வாங்க இந்திய முயன்றாலும் அதன் விலை இந்தியாவிற்கு கட்டுபடி ஆகாது என சொல்லப்படுகிறது.
இந்தியாவின் மொத்த ஆயுத கொள்முதலை கருத்தில் கொண்டால் 48 சதவிகிதம் வரை ரஷ்யாவிடம் இருந்தும், பிரான்ஸ் 27 சதவிகிதமும், அமெரிக்கா 12 சதவிகிதமும் இதர நாடுகள் 15 சதவிகிதமும் வழங்கி வருகின்றன.
மேலும் தற்போது இந்திய பயன்படுத்திவரும் ராணுவ ஆயுதங்களில் 50 சதவிகிதத்திற்கும் மேலானவை ரஷ்யா நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற முக்கிய காரணங்களே ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாடை இந்தியாவால் தெரிவிக்க முடியவில்லை என சொல்லப்பட்டு வருகிறது.
எச்சரிக்கையை விடுத்த ரஷ்ய வீரர்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்: அதிரடி வீடியோ ஆதாரம்