உணவுப் பற்றாக்குறை... உக்ரைனில் விளாடிமிர் புடினின் வீரர்கள் எடுத்த கடுமையான முடிவு
உக்ரைனில் போரிடும் விளாடிமிர் புடினின் பட்டினியால் வாடும் துருப்புக்கள் நரமாமிசத்தை நாடும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
உணவுப் பற்றாக்குறை
ரஷ்ய வீரர்களின் உரையாடல்களை உக்ரேனியப் படைகள் இடைமறித்த நிலையிலேயே குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விளாடிமிர் புடினின் சட்டவிரோதப் படையெடுப்பை முன்னெடுத்து வரும் ரஷ்ய வீரர்கள்,

போர்க்களத்தில் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், தொடர்ச்சியான உணவுப் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மட்டுமின்றி, எரிவாயு சிலிண்டர்கள், இறைச்சி, தானியங்கள் மற்றும் சிகரெட்டுகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவுகளை வீரர்கள் தாங்களாகவே ஏற்றுக்கொள்ளும் நிலை இருப்பதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் உக்ரேனிய உளவுத்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உக்ரைனின் சபோரிஜியா பிராந்தியத்தில் படையெடுத்துள்ள வீரர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் தற்போது நரமாமிசம் உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றே உக்ரைனின் GUR இராணுவ உளவு அமைப்பு உறுதி செய்துள்ளது.
கடுமையான உணவுப் பற்றாக்குறையால், ரஷ்ய வீரர்கள் தங்கள் இளைய வீரர்களின் சடலங்களை சாப்பிடத் தயாராகி வருகின்றனர் என்றே அந்த உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுவான செயல்
பல ரஷ்ய வீரர்கள் தங்களின் நிலை குறித்து புகார் அளிப்பதும், உணவுப் பற்றாக்குறை குறித்து அதிகாரிகளுடன் கோபத்தில் உரையாடுவதும் உக்ரைன் உளவு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய வீரர்களிடையே நரமாமிசம் உண்ணும் பழக்கம் ஒரு பொதுவான செயலாகி வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம், ரஷ்ய ஆயுதப் படைகளின் 68வது மோட்டார் ரைபிள் பிரிவைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரர் தனது சக வீரரின் உடலை இரண்டு வாரங்களாகச் சாப்பிட்டு வந்தது தெரியவந்தது என GUR இராணுவ உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, புடினின் படைகள் மேலும் பிரதேசங்களைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக, சபோரிஜியா பிராந்தியத்தில் உக்ரைன் புதிய பாதுகாப்பு நிலைகளை அமைத்துள்ளது.
அரசு சிறப்புப் போக்குவரத்து சேவையின் படைகள் ஏற்கனவே 2,130 பிளாட்டூன் வீரர்களையும், சுமார் 1,864 மைல் நீளமுள்ள டாங்கெதிர்ப்பு அகழிகளையும், 621 மைல்களுக்கும் அதிகமான தடுப்புப் பிரமிடுகளையும், சுமார் 9,942 மைல் நீளமுள்ள ஈகோசா [ரேசர் கம்பி] தடுப்பு வரிசைகளையும், தோராயமாக 2,672 மைல் நீளமுள்ள குறைந்த பார்வைத் தடைகளையும் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |