உக்ரைன் போர் இறுதி யுத்தத்துக்கான ஆரம்பம்... பைபிளில் சொல்லப்பட்டது நிறைவேறுகிறது: பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ள நபர்
உக்ரைன் மீது போர் தொடுக்க புடினை கடவுள்தான் கட்டாயப்படுத்தியுள்ளார், இது இறுதி யுத்தத்துக்கான ஆரம்பம் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்கர் ஒருவர்.
பிரபல அமெரிக்க தொலைக்காட்சி சுவிசேஷகரான Pat Robertson (91), நீங்கள் எல்லாரும் புடினுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறீர்கள். ஒருவேளை இருக்கலாம், ஆனால், அவர் கடவுளின் கட்டாயத்தின்பேரில் இயங்குகிறார்.
உக்ரைன் ஒரு சிறிய துவக்கம்தான் என்று கூறும் Robertson, அது இஸ்ரேலில் நடக்க இருக்கும் இறுதி யுத்தத்துக்கான ஆரம்பம் என்று கூறியுள்ளார்.
புடின் உக்ரைனுக்குள் நுழைந்தார், ஆனால், அது அவரது இலக்கு அல்ல! அவரது இலக்கு இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கைகளைத் துவக்குவது என்று கூறும் Robertson, பைபிளில் சொல்லப்பட்டபடி, பல நாடுகள் ரஷ்யாவுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக எழும்பும் என்றும், அது பைபிளில் சொல்லப்பட்ட இறுதி யுத்தத்துடன் முடிவுக்கு வரும் என்றும் கூறுகிறார்.
கிறிஸ்தவ தொலைக்காட்சி ஒன்றை நிறுவி, தலைமையேற்று, 60 ஆண்டுகளாக நடத்திவந்த Pat Robertson ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், உக்ரைன் தாக்குதல் தொடர்பாக பேசுவதற்காக மீண்டும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.