எல்கேஜி முதல் கல்லூரி வரை... மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புடின் உருவாக்கிவரும் படை
மேற்கத்திய நாடுகளுக்கெதிராக, மாணவ மாணவியரை, எதிர்கால ராணுவ வீரர்களாக புடின் உருவாக்கிவருவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
புடின் உருவாக்கிவரும் படை
தன் மக்கள் தன்னிடம் விசுவாசமாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின், தன்னுடைய தாக்கம் தன் மக்கள் மீது போதுமான அளவில் இல்லை என கருதுவதாகத் தெரிவிக்கிறார் ஐரோப்பிய கவுசிலைச் சேர்ந்த ரஷ்ய நிபுணரான மிக்காயில் கோமின்.
ஆகவே, ரஷ்ய மாணவ மாணவியருக்கு நாட்டுப்பற்றைக் குறித்த விடயங்கள் தீவிரமாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் அவர்.
ஆகவே, அடுத்த 10 ஆண்டுகளில், இந்த தீவிர கல்வியால், புடினுக்கு விசுவாசமான ஒரு தலைமுறையே உருவாகியிருக்கும் என்கிறார் அவர்.
தன் மக்கள் தன்னை விமர்சிப்பவர்களாக மாறிவிடக்கூடாது என்னும் எண்ணம் புடினுக்கு உள்ளது.
ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் ஒரு மோதல், ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே ஒரு போர் துவங்கியுள்ளதாக ரஷ்யா கருதும் நிலையில், புடின் தன்னாலியன்றவரையில் தன் நாட்டு மக்களை கட்டுப்படுத்த முயல்வதாகத் தெரிவிக்கிறார் மிக்காயில்.
ஆகவே, ரஷ்யாவில் எல்கேஜி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவ மாணவியர் அதற்கேற்ப மூளைச்சலவை செய்யபடுவதாக அவர் தெரிவிக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |