உக்ரைன் போரை நிறுத்த அவரால் முடியும்! அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் ஜோ பைடன் நிர்வாகம் வரவேற்கும் என NSC செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி பேச்சுவார்த்தை
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோரின் இருதரப்பு உரையாடல் நடந்தது.
அப்போது மோடி கூறிய கருத்துக்களை உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் பாராட்டின.
@AFP
அமெரிக்கா அறிக்கை
இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி வெளியிட்ட அறிக்கையில் உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசியுள்ளார்.
அவரது அறிக்கையில், 'உக்ரேனிய மக்களின் தற்போதைய நிலைக்கு விளாடிமிர் புடின் என்ற ஒற்றை நபர் தான் பொறுப்பு. அவரால் உடனேயே போரை நிறுத்த முடியும். அவர் எரிசக்தி மற்றும் மின்சார உள்கட்டமைப்பில் ஏவுகணைகளை வீசுகிறார். மேலும் விளக்குகளை தட்டி வெப்பத்தை தட்ட முயற்சிக்கிறார்.
இதனால் உக்ரேனிய மக்கள் ஏற்கனவே இருந்ததை விட அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் அவகாசம் உள்ளது. இந்திய பிரதமர் மோடி அதற்கு எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும்' என தெரிவித்துள்ளார்.
@Kevin Dietsch/Getty
முன்னதாக, ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்புமாறு, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிடம் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
@Andrew Matthews/Pool via AP