அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை... தொலைபேசியில் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின்

Donald Trump Vladimir Putin
By Arbin Mar 19, 2025 02:47 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாட நேரம் குறித்த பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் எச்சரித்தும்

ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலுக்கு அவர் தாமதமாகிறார் என்பதை அதிகாரிகள் எச்சரித்தும், விளாடிமிர் புடின் ஒரு வெடிச்சிரிப்புடன் அதை புறந்தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை... தொலைபேசியில் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் | Putin Keeps Trump Waiting One Hour

ஏற்கனவே, உக்ரைன் போர் தொடர்பில் விவாதிக்க ட்ரம்ப் அனுப்பிய தூதர் ஒருவரை சந்திக்க விளாடிமிர் புடின் சுமார் 8 மணி நேரம் தாமதப்படுத்தியுள்ளார். தற்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் விவாதிக்க நேரம் ஒதுக்கிய பின்னர்,

மாஸ்கோவில் தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களிடம் நேரிடையாக பேசும் வருடாந்திர ரஷ்ய நிகழ்வில் கலந்துகொள்ள சென்றிருந்தார். ரஷ்ய நேரப்படி மதியத்திற்கு மேல் 4ல் இருந்து 6 மணிக்குள் ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலுக்கு புடின் ஒப்புக்கொண்டிருந்தார்.

ஆனால் அதற்கு முன்னதாக தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களிடம் நேரிடையாக பேசும் நிகழ்ச்சிக்கும் புடின் ஒப்புக்கொண்டிருந்தார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ட்ரம்புடன் பேச ஜனாதிபதி மாளிகைக்கு திரும்ப வேண்டும் என அவர் அவசரப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

சரணடைந்தால் மட்டுமே... உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் மீண்டும் மிரட்டல் விடுத்த புடின்

சரணடைந்தால் மட்டுமே... உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் மீண்டும் மிரட்டல் விடுத்த புடின்

மாலை 4 மணியைத் தாண்டியபோது நிகழ்ச்சியை நடத்தும் அலெக்சாண்டர் ஷோகின் என்பவர் ஜனாதிபதி புடினிடம் அது குறித்து பேசுகிறார், 6 மணிக்கு முன்னர் ட்ரம்புடன் தொலைபேசி உரையாடல் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடுகிறார்.

அப்போதும் புடின் அவசரப்படவில்லை என்றும், கடைசியில் மாநாட்டில் இருந்து வெளியேறி, ஜனாதிபதி மாளிக்கைக்கு அவர் வந்து சேரும் போது மாலை 5 மணி என்றே கூறப்படுகிறது.

தாமதப்படுத்தி வருகிறார்

அதாவது ட்ரம்புடன் உரையாடலுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக அவர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதி ட்ரம்பை அவர் தொடர்பு கொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை... தொலைபேசியில் நீண்ட ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த புடின் | Putin Keeps Trump Waiting One Hour

அமெரிக்கா உக்ரைனுடன் ஒப்புக்கொண்ட 30 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை விளாடிமிர் புடின் இதுவரை ஏற்கவில்லை. இந்த உரையாடலில் புடினை ஒப்புக்கொள்ள வைக்க தமக்கு கிடைத்த வாய்ப்பு இதுவென ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், ட்ரம்பிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காக புடின் போர் நிறுத்தத் திட்டத்தை தாமதப்படுத்தி வருகிறார் என்றே கூறப்படுகிறது.

மேலும், 2014ல் ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பிரதேசமான கிரிமியாவை இனிமேல் ரஷ்ய பகுதி என ட்ரம்ப் ஆதரிப்பார் என்றே கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் தரப்பில் அதை ஏற்றுக்கொள்வார்களா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US