புடின் மக்ரோனை தூரமாக வைத்து பேசியது ஏன்? வெளிச்சத்திற்கு வந்த காரணம்
ரஷ்யா அதிபர் புடின், பிரான்ஸ் ஜனாதிபதியை தூரமாக வைத்து பேசியது ஏன் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
உக்ரைன் நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா பயணித்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், கடந்த திங்கட்கிழமை புடினை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் தூரமாக இருந்த படி பேச்சுவார்த்தையில் ஈடுபட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
ஏன் இருவருக்கும் இடையில் இவ்வளவு இடைவெளி என கேள்விகள் எழுந்தது. இந்த இடைவெளியின் மூலம் புடின் ஏதோ செய்தி சொல்லவதாக பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின் போது 13 அடி இடைவெளி கடைபிடிக்கப்பட்டதற்கான காரணத்தை மக்ரோனுடைய நெருங்கிய வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
அதாவது, ரஷ்யா சென்ற மக்ரோனுக்கு இரண்டு ஆப்ஷ்ன வழங்கப்பட்டது. ஒன்று ரஷ்யா அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனையை ஏற்றுக்கொண்டால், புடினை நெருக்கமாக சந்திக்கலாம் அல்லது ரஷ்யா பிசிஆர் சோதனைக்கு மறுத்தால் கடுமையான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டது.
ஆனால், ரஷ்யா பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட மக்ரோன் மறுத்துவிட்டார்.
ஏனெனில் இதன் மூலம் பிரான்ஸ் ஜனாதிபதியின் DNA விவரங்கள் ரஷ்யர்களுக்கு தெரியவரும் என்பதால் பிரான்ஸ் அதிகாரிகள் அதை மறுத்துவிட்டனர் என மக்ரோனின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.