விமானங்களையும் ஏவுகணைகளையும் தாக்கி அழிக்கும் பயங்கர ஆயுதத்தை களமிறக்கும் புடின்: அடுத்தது இந்த ஏவுகணையாம்
உக்ரைன் போரில் ரஷ்யப் படைகள் ஏராளம் இழப்புகளை சந்தித்து வரும் நிலையிலும், தளராமல் தொடர்ந்து புதிது புதிதாக பயங்கர ஆயுதங்களை களமிறக்கிக்கொண்டிருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
அவ்வகையில், S-500 என்னும் பயங்கர ஆயுதம் ஒன்றை ரஷ்யப் படைகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.
இந்த S-500 என்னும் ஆயுதம், தரையிலிருந்து ஏவப்பட்டு, விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கக்கூடிய திறன்கொண்டதாகும்.
அத்துடன், விரைவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் சாத்தான் 2 ஏவுகணையும் ரஷ்யப் படைகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
இந்த சாத்தான் 2 ஏவுகணை, 15 அணு ஆயுதங்களை சுமந்துகொண்டு 11,000 மைல் தொலைவுக்கு பயணித்து, ஒரே தாக்குதலில் பிரித்தானியா அளவிலான ஒரு நாட்டையே காணாமல் போகச் செய்யும் அளவுக்கு பயங்கரமானது என்பது குறிப்பிடத்தக்கது.