உக்ரைன் போர் தொடர்பில்... புடினுக்கு எதிராக ட்ரம்பிடம் பற்றவைத்த ஜி ஜின்பிங்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒருநாள் உக்ரைன் மீது படையெடுத்ததற்காக வருந்தக்கூடும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுடன் பகிரங்கமாக
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவின் தேவைகள் ஒத்திருப்பதால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசிசி) எதிராக மூன்று நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

போர் தொடங்கியதிலிருந்து சீனா ரஷ்யாவுடன் பகிரங்கமாக நெருங்கிய உறவைப் பேணி வருவதுடன், புட்டினை வெளிப்படையாக விமர்சிப்பதையும் தவிர்த்து வருவதால், ஜியின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஜோ பைடனுடன் ஜி ஜின்பிங் சந்திப்புகளை முன்னெடுத்திருந்தாலும், உக்ரைன் தொடர்பில் நேரடியாகவும் வெளிப்படையாகவும் இருவருக்கும் இடையே கருத்துப்பரிமாற்றம் நடந்துள்ளது.
ஆனால், சீன ஜனாதிபதி இதற்கு முன்பு புடின் குறித்தோ அல்லது படையெடுப்பு குறித்தோ தனது தனிப்பட்ட மதிப்பீட்டைப் பகிர்ந்துகொண்டதில்லை. புடின் தொடர்பில் கசிந்துள்ள தகவலை அமெரிக்காவும் சீனாவும் தற்போது மறுத்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று கூறியுள்ளார். ட்ரம்பும், அது உண்மைக்கு புறம்பானது என்றே மறுத்துள்ளார்.
ரஷ்ய தரப்பில் இருந்தும், சீனா உரிய பதில் இந்த விவகாரத்தில் அளித்துள்ளது என விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை தரப்பில் பெய்ஜிங் சந்திப்பு குறித்த தகவல் தாளை வெளியிட்டது, ஆனால் அதில் புடின் அல்லது உக்ரைன் போர் சம்பந்தப்பட்ட எந்த விவாதமும் குறிப்பிடப்படவில்லை.

அதிகார துஷ்பிரயோகம்
மட்டுமின்றி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் விளக்கமளிக்கவும் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அரசியல்மயமாக்கப்படுவதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், அமெரிக்க இறையாண்மையில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டி, ட்ரம்ப் நிர்வாகம் கடந்த காலங்களில் அதனை தொடர்ந்து விமர்சித்துள்ளது.

இதனிடையே, ஜி ஜின்பிங்குடனான மற்றொரு சந்திப்பிற்காக புடின் செவ்வாய்க்கிழமை சீனாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யத் தலைவரின் இந்தப் பயணம், முன்னாள் சீன ஜனாதிபதி ஜியாங் ஜெமின் மற்றும் புடின் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட சீன-ரஷ்ய நட்புறவு ஒப்பந்தத்தின் 25வது ஆண்டு நிறைவு நாளுடன் ஒத்துப்போகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |