புடினின் பிடிவாதம்... உக்ரைனில் 9 தளபதிகளை பறிகொடுத்த ரஷ்யா: வெளிவரும் பகீர் தகவல்
உக்ரைன் போரில் இதுவரை 9 முக்கிய தளபதிகளை ரஷ்யா பறிகொடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் 13வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைனில் ஒவ்வொரு மாவட்டமாக சிதைத்து, பெரும் இழப்பை ஏற்படுத்தி வரும் ரஷ்ய படைகள், இதுவரை மொத்தம் 12,000 பேர்களை உக்ரைன் படைகளிடம் பறிகொடுத்துள்ளது.
மட்டுமின்றி, 9 தளபதிகளையும் ரஷ்ய படைகள் பறிகொடுத்துள்ளது. மிக சமீபமாக ரஷ்ய தளபதி Vitaly Gerasimov உக்ரைன் படைகளால் கொல்லப்பட்டுள்ளார். 2014ல் உக்ரைனிடம் இருந்து கிரிமியா பகுதியை ரஷ்யா வலுக்கட்டாயமாக கைப்பற்றிய விவகாரத்தில் ஜனாதிபதி புடினிடம் இருந்து உயரிய விருது பெற்றவர் இந்த Vitaly Gerasimov.
மட்டுமின்றி சிரியாவில் ரஷ்ய துருப்புகளுக்கு தலைமை தாங்கியவர் இந்த Vitaly Gerasimov. இரண்டாவது செச்சென் போரிலும் இவர் பங்கேற்றுள்ளார். இவர் மட்டுமின்றி, விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான மேலும் மூன்று தளபதிகளும் உக்ரைன் போரில் சமீபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், போர் நடவடிக்கையை கண்காணிக்கும் பொருட்டு மூன்று தளபதிகள் ஒன்றாக சென்ற நிலையில், உக்ரைன் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி பிரபலமல்லாத மேலும் இரு தளபதிகளும் உக்ரைன் போரில் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, உக்ரைன் போருக்கு என தெரிவு செய்த பிப்ரவரி 24 என்பது மிக மோசமான நாள் எனவும், அந்த தவறால் தான் இழப்புகளை நேரிடுவதாக ரஷ்ய தரப்பில் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.