சுவிட்சர்லாந்தில் ஆடம்பர பங்களா ஒன்றை வாங்க திட்டமிட்ட புடின்: பின்னர் நடந்தது...
சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கியிருப்பாராம் புடின்...
ஆனால், என்ன காரணத்தாலோ அவரது எண்ணம் நிறைவேறாமல் போயிருக்கிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதால், உலகின் நம்பர் ஒன் பணக்காரர் புடின்தான் என்று கூறும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்த தகவலை Aargauer Zeitung என்னும் சுவிஸ் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு, தனது முதல் பதவிக்காலத்தை புடின் நிறைவு செய்திருந்த நேரத்தில், Fribourg மாகாணத்தில் உள்ள அந்த ஆடம்பர பங்களாவை வாங்க திட்டமிட்டாராம் புடின்.
சுற்றிலும் பாதுகாப்பாக வேலியமைக்கப்பட்டு, உயரமான ஸ்டீல் கதவுகளுடன், நிலத்துக்கடியில் கிட்டத்தட்ட அணுகுண்டு கூட தாக்க முடியாத பிரம்மாண்ட இரகசிய அறை ஒன்றுடன் அமைக்கப்பட்டிருந்த அந்த வீடு புடினுக்கு நிச்சயம் பொருத்தமாகத்தான் இருந்திருக்கும்.
ஆனால், அந்த வீட்டை அவர் சென்று பார்வையிட்ட நிலையிலும் எப்படியோ அது கைநழுவிப்போனதாம். என்ன காரணத்தால் அது கைநழுவிப்போனது என்பது தெரியவில்லை.
இப்போது அந்த வீட்டை Barclays வங்கி வைத்திருக்கிறதாம். அந்த வங்கி அந்த வீட்டை 17 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு வாங்கியுள்ளதாம்.