புடின் என்னை மிரட்டியதே இல்லை... அந்தர் பல்டி அடித்த ஜேர்மன் சேன்ஸலர்
ஜேர்மன் வெளியுறவு அமைச்சர், ஜேர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் போர் என கூறியுள்ள நிலையில், புடின் என்னை மிரட்டியதே இல்லை என அந்தர் பல்டி அடித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
ஜேர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் போர்
சமீபத்தில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, ஜேர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் போர் என்று கூறியிருந்தார்.
ஆனால் அதைத் தொடர்ந்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், ரஷ்ய ஜனாதிபதி புடின், தன்னையோ, ஜேர்மனியையோ மிரட்டியதேயில்லை என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே போர் வாகனங்களை உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்கியதால் புடின் கோபமாக இருக்கும் நிலையில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரின் அறிக்கை அவரை மேலும் ஆத்திரமூட்டியிருக்கக்கூடும்.
ஆனால், புடினுடைய கோபத்தைக் குறைக்கும் முயற்சியாக, ரஷ்ய ஜனாதிபதி புடின் தன்னை மிரட்டியதில்லை என கூறியுள்ளார் ஷோல்ஸ்.
சமீபத்தில், பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், தன்னை ஏவுகணையால் தாக்குவேன் என புடின் மிரட்டியதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.