முழு பிரித்தானிய இராணுவத்தையும் விட... பயமுறுத்தும் புடினின் ட்ரோன் படை

Vladimir Putin Russian Federation Drones
By Arbin Feb 07, 2026 03:13 AM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அமைத்துள்ள புதிய ட்ரோன் படையானது முழு பிரித்தானிய இராணுவத்தையும் விடப் பெரியது என்று கூறப்படுகிறது.

ட்ரோன் படை

போர் ஆய்வுக்கான முகமை ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் புதிதாக உருவாக்கப்பட்ட ட்ரோன் படையில் 87,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முழு பிரித்தானிய இராணுவத்தையும் விட... பயமுறுத்தும் புடினின் ட்ரோன் படை | Putin New Drone Squad

மே 2025-ல் மாஸ்கோவில் நடைபெற்ற வெற்றி நாள் அணிவகுப்பின் போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உயரடுக்கு படைப்பிரிவு, தற்போது ஏழு படைப்பிரிவுகள், 25 பட்டாலியன்கள், ஒரு பிரிவு மற்றும் மூன்று தனிப்படைக் குழுக்களைக் கொண்டுள்ளது.

வெளியான தகவல்களின் அடிப்படையில், ரஷ்யா 2026-ஆம் ஆண்டில் ஒரு பிரிகேட், நான்கு ரெஜிமென்ட்கள், 96 பட்டாலியன்கள், இரண்டு டிவிஷன்கள் மற்றும் 82 கம்பெனிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவே தெரிய வந்துள்ளது.

இதற்கு மாறாக, தொடர்ச்சியான கடுமையான செலவுக் குறைப்புகளால் பிரித்தானிய இராணுவத்தின் எண்ணிக்கை கடுமையாக சரிவடைந்து, கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் அதன் மிகச்சிறிய நிலைக்குச் சுருங்கியுள்ளது.

தங்கத்தை மிக மலிவான விலையில் விற்கும் ஒரு இந்திய மாநிலம்: ஆச்சரியப்படுத்தும் அதன் காரணம்

தங்கத்தை மிக மலிவான விலையில் விற்கும் ஒரு இந்திய மாநிலம்: ஆச்சரியப்படுத்தும் அதன் காரணம்

அக்டோபர் 2025-ஆம் ஆண்டில் வெளியான சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானிய இராணுவத்தில் பணியமர்த்துவதற்குத் தயாராக 74,270 முழுநேரப் பயிற்சி பெற்ற வீரர்களும் , கூடுதலாக 25,710 இருப்புப் படை வீரர்களும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, பிரித்தானியாவிடம் ட்ரோன்களை இயக்கக்கூடிய சுமார் 3,000 வீரர்கள் மட்டுமே உள்ளனர். பனிப்போர் முடிவடைந்த காலகட்டத்தில், பிராந்திய இராணுவம் என்று அழைக்கப்பட்ட அந்தப் படைப்பிரிவில், ஏறக்குறைய 73,000 பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்தனர்.

முழு பிரித்தானிய இராணுவத்தையும் விட... பயமுறுத்தும் புடினின் ட்ரோன் படை | Putin New Drone Squad

ஆள் பற்றாக்குறை

இரண்டாம் உலகப் போரின் முடிவில், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவ இருப்புப் படையினர் போரிடுவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

நிதிப் பற்றாக்குறையின் காரணமாக, அரசாங்கங்கள் முழுநேர இராணுவம், ராயல் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றன.

ஆனால் இது இருப்புப் படைகளில் ஆள் பற்றாக்குறை ஏற்பட வழிவகுத்துள்ளது. மேலும், பகுதி நேரப் படையினர் வரலாற்று ரீதியாக உடல் கவசங்கள், ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் போன்ற அடிப்படை உபகரணங்கள் இல்லாமல் இருப்பதோடு, அவர்களுக்குத் தேவையான பயிற்சியையும் பெறுவதில்லை.

முழு பிரித்தானிய இராணுவத்தையும் விட... பயமுறுத்தும் புடினின் ட்ரோன் படை | Putin New Drone Squad

இதனிடையே, பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், ட்ரோன் படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக 4 பில்லியன் பவுண்டுகளைச் செலவிடுகிறோம்.

ராணுவம் ஏற்கனவே 3,000 ட்ரோன் விமானிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளது, மேலும் அடுத்த ஆண்டு மேலும் 6,000 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US